இறந்தவர்களை எவ்வாறு வழிபாடு செய்வது மற்றும் அவர்களின் படங்களை எந்த திசையில் மாற்றுவது என சந்தேகமா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்….

Published by
K Palaniammal

நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது நம் அப்பா அம்மா தான். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று இறந்தவர்களின் முறையான வழிபாட்டு முறை பற்றிய சந்தேகம்தான். அவற்றை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.

வாழ்கின்ற காலங்களில் நம்மை எவ்வளவோ போற்றி பாதுகாத்து  வளர்த்து இந்த அளவிற்கு நம்மை கொண்டு வந்தது நம் முன்னோர்களாகிய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால் அதை பக்கத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொடுத்தால் சம்பந்தமே இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உடனே நன்றி சொல்வோம்.

இந்த மனிதநேயம் உள்ள நமக்கு ஏன் நம்மை போற்றி பேணி காத்தவர்களுக்கு இறந்த பிறகும் நன்றி செலுத்துவது ஒன்றும் தவறில்லையே. அவர்களை நினைத்து அவர்களின் உருவப்படங்களை வழிபடுவது கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டும். மேலும் நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர்களை பற்றி தெரிய வேண்டும் அல்லவா அதற்காகவாவது வழிபாடு செய்ய வேண்டும்.

பூஜை அறையில் இறந்தவர்களின் படத்தை வைக்கலாமா?

சாஸ்திர நியதிப்படி அவர்களின் படத்தை வைக்க கூடாது. ஏனென்றால் அவர்களும் மனிதர்களாக இப்பூமியில் வாழ்ந்தவர்கள் தான், வாழும்போது கோபம், பொறாமை போன்ற தீய குணங்களில் ஏதேனும் ஒரு  சமயத்தில் உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள். ஏதேனும் ஒன்றிற்காவது ஆட்பட்டிருப்பார்கள். எனவே தெய்வ நிலையில் உள்ளவர்களை மட்டுமே பூஜை அறையில் வைக்க வேண்டும்.

கடவுள் படத்திற்கு இணையாக வைக்க கூடாது. ஒரு சிலருக்கு தோன்றும் என் அப்பா அம்மா நல்லவர்கள். அதனால் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து நன்றாக இருக்கிறோம் என்றால் வைத்துக் கொள்ளலாம். அது உங்களின் மனதிருப்திக்கு, ஆனால் சாஸ்திரப்படி வைக்கக் கூடாது. படுக்கை அறை மற்றும் பூஜை அறையை தவிர்த்து மற்ற இடங்களில் மாட்டி வைக்கலாம்.

பூஜை செய்யும் முறை

கடவுளுக்கு ஏற்றும் விளக்குகளில் ஏற்றக்கூடாது தனியாக விளக்கு  வைத்துக் கொள்ள வேண்டும் மற்றபடி கடவுளை வழிபடும் நேரத்தில் அவர்களுக்கும் பூக்கள், கற்பூரம், ஊதுபத்தி போன்றவற்றை வைக்கலாம் தினமும் அவர்களை வழிபடுவது சிறந்தது.மேலும் அமாவாசை போன்ற தினங்களில் வழிபடுவது அனைவரும் அறிந்தது தான் அன்று மட்டும் அல்லாமல் தினமும் செய்வது உத்தமம்.

எந்த திசையில் படங்களை மாற்றுவது

இறந்தவர்களின் பார்வை தெற்கு நோக்கி இருக்க வேண்டும் அதாவது வடக்கு சுவற்றில் படம் மாற்றினால் அவர்கள் பார்ப்பது தெற்கு நோக்கி தான் இருக்கும் இதுவே சரியான திசையாகும். இவ்வாறு மாற்றினால் வளர்ச்சியை கொடுக்கும்.

யாரெல்லாம் வழிபாடு செய்யலாம்

இறந்தவர்களின் உரிமையாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வழிபாடு செய்யலாம் அவ்வாறு செய்வதால் குடும்பத்தில் விருத்தி உண்டாகும் மேலும் எவ்வித சச்சரவு இல்லாத நல்ல வாழ்க்கை அமையும். எனவே நம் முன்னோர்களை தினமும் வழிபட்டு வாழ்வில் முன்னேற்றத்தை அடைவதோடு அவர்களின் நல் ஆசியையும் பெறுவோம்.

Recent Posts

“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…

21 minutes ago

சீட்டுக்கட்டுபோல சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்! முதல் நாளிலேயே ‘ஆல் அவுட்’

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

54 minutes ago

ED ரெய்டு… “யார் என்று தெரியவில்லை” வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் தீவிர ஆலோசனை?

சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…

2 hours ago

Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்… அமலாக்கத்துறை சோதனை வரை…

சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…

4 hours ago

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது!

கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…

5 hours ago

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

5 hours ago