கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம்.
கிரிவலம் செல்லும் போது மெதுவாகத்தான் நடக்க வேண்டும். விளையாடி கொண்டு ஓடுவது பேசிக்கொண்டு செல்வது இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்வதுதான் சிறந்தது.
நீண்ட தூரம் கிரிவலம் செல்ல வேண்டி இருந்தால் குறைவான உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்.
மலைகளை சுற்றி பல சித்தர்கள் வாழ்வார்கள். நாம் கிரிவலம் செய்யும்போது கடவுளின் அருளோடு சித்தர்களின் ஆசியும் ஆற்றலும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும்.அருள் வேண்டுவோருக்கு அம்மாவாசையிலும் பொருள் வேண்டுவோருக்கு பௌர்ணமியிலும் கிரிவலம் செய்யலாம் என்ற வாக்கு கூட உள்ளது.
ஏனென்றால் அந்த தினங்களில் மூலிகைகள் தங்களின் முழு பலனையும் வெளிப்படுத்தும், அதன் அபூர்வ சக்தியும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக பௌர்ணமி தினத்தில் சில அபூர்வ மூலிகைகள் அதன் ஆற்றலை வெளிப்படுத்தும்.
நம்முடைய வினைகள் மனம், மெய் ,மொழி இவைகளின் மூலம் தான் வரும். இந்த வகையில் இறைவனை நினைத்து நம் உடலை வருத்தி செய்யும் செயலானது நம் வினைகளை நீக்கும், தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்லும் போது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் மேற்கொள்வது மிகச் சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற கிரிவலத்தை வாழ்வில் நாம் ஒரு முறையேனும் வலம் வந்து அந்த மலையைப் போல் நாம் வாழ்விலும் உயர்வோம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…