பூஜை அறையில் மறந்தும் இந்த பாத்திரத்தை வைக்காதீர்கள்..! 

pooja room 1

பூஜை பொருட்கள் – பூஜை அறையில் சுவாமிக்கு விளக்கு ஏற்றவும் ,நெய்வேத்தியம் வைக்கவும் உகந்த பாத்திரம் எது மற்றும் பயன்படுத்தக்கூடாத பாத்திரம் எது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பூஜைக்கு பயன்படுத்த கூடாத பாத்திரம் :

  • இறைவழிபாட்டில் நம் வீட்டின் பூஜை அறைக்கு நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளது. இதனால்தான் பூஜை அறையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து வைக்கின்றோம் .
  • அதுபோல் விளக்கேற்றுவதற்கு உகந்த விளக்குகள் இதுதான் என்று பல நியதிகளை  நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர் .அதில்  பாத்திரங்களில் எவர் சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பூஜைக்கு உகந்த பாத்திரங்கள்  :

  • ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு ஈர்ப்பு தன்மை உள்ளது. அதில் தங்கம், வெள்ளி, செம்பு, மண், ஐம்பொன், பித்தளை இவைகளுக்கு நல்ல சக்திகளை ஈர்த்து அந்த இடத்தை மிளிர  செய்யும் தன்மையைக் கொண்டது .
  • ஆனால் எவர்சில்வருக்கு  எதையும் ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தும் கற்பூரம் ஏற்றும் தட்டு, விளக்கு வைக்க கூடிய வட்டில் போன்றவற்றை எவர்சில் வரை பயன்படுத்தக் கூடாது.
  • ஏதேனும் விசேஷ நிகழ்வுகள், ஹோமம் போன்ற தினங்களில் நிறைய பூஜை பொருள்கள் வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது விசேஷ தினங்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்ய நிறைய பூக்கள் ,பழங்கள்  வைத்திருப்போம் அதை வைத்துக் கொள்ள அன்று ஒரு நாள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே தினமும் பூஜையில் எவர்சில் வரை தவிர்த்து ,பித்தளை வெள்ளி போன்ற பொருட்களை பயன்படுத்தினால் அது  பூஜை அறையை தெய்வீக சக்தியாக மாற்றி தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்