c section
சிசேரியன் குழந்தை -இன்று பல பெண்கள் சுகப்பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் அப்படி பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதினால் அது பலிக்குமா என பலருக்கும் தோன்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்.
ஒரு குழந்தை இயற்கையாகவே இந்த பூமியில் பிறந்தால் தான் அதற்கு ஜாதகம் பலிக்கும் எனவும் சிசேரியன் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ,இது நாமாகவே கணக்கிட்ட நேரம் தானே அதனால் அந்த ஜாதகம் செல்லுமா என ஒரு கேள்வி மற்றும் குழப்பங்கள் இருக்கும். ஒரு சிலர் நட்சத்திரம், நேரம் போன்றவற்றை குறித்துக் கொண்டு அந்த நேரத்தில் தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இங்கு ஒரு சிலருக்கு ஜாதகமே நம்பிக்கை இல்லாமல் உள்ளது. ஆனால் ஜாதகத்தை நம்புவர்கள் பலரும் நம்மில் உள்ளார்கள்.
பிறப்பு எப்படி இருந்தாலும் அதை தீர்மானம் செய்வது இறைவன்தான் இது அறுவை சிகிச்சைக்கும் பொருந்தும். என்னதான் நாம் நேரம், நாள், நட்சத்திரம் குறித்துக் கொடுத்தாலும் ஏதாவது காலதாமதம் ஏற்படலாம்.
உதாரணமாக அப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த பின் அந்த நிலைக்குச் செல்ல காலதாமதம் ஏற்படலாம் அல்லது வேறு ஏதாவது வகையில் தாமதங்கள் ஏற்படலாம் நீங்கள் குறித்து கொடுத்த நேரம் மூன்று முப்பது என்பது 3. 40 ஆக கூட ஆகலாம் இதுதான் இறைவன் கணக்காகும்.
ஆகவே அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட குழந்தைக்கும் ஜாதகம் என்பது சரியாகத்தான் இருக்கும். அதற்கு குறிக்கப்பட்ட பலனும் சரியாகத்தான் இருக்கும். ஆகவே இறைவனுடைய கருணையால் இந்த நேரத்தில் இந்த குழந்தை பிறந்தது என மகிழ்ச்சியோடு அந்த நேரம் எதுவோ அதற்குரிய கணக்கை எழுதி அதற்குண்டான பலனை தெரிந்து கொள்ளலாம்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…