உணவு சாப்பிட்ட தட்டில் கைக்கழுவும் பழக்கம் இருக்கா, அப்போ இந்த பாதிப்புகள் ஏற்படும்.
பெரும்பான்மையான மக்கள் உணவு உண்ட பின் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவார்கள். ஆனால் சாப்பிட்ட தட்டில் கைகளை கழுவக்கூடாது. நீங்கள் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவது அபசகுனமாக கருதப்படுகிறது. நீங்கள் சில நேரங்களில் தட்டில் உள்ள சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்.
அதனால் அந்த தட்டிலேயே நீங்கள் கைகளை கழுவுவதன் மூலம், அதில் மீதம் இருக்க கூடிய உணவு அவமதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் மீது, மகாலட்சுமியும், அன்னபூரணி தாயும் கோவம் அடைவார்கள். இதனை தொடர்ந்து வீட்டில் வறுமை தொடங்க ஆரம்பிக்கும். உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேபோல் பல்வேறு புராணங்களில் கூட உணவை அவமதிப்பது பாவமாக கருதப்படுகிறது. உண்ட தட்டில் கைகளை கழுவுவது, அதில் இருக்கும் உணவுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது. எனவே யாரும் உணவை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அதனால் சில விஷயங்களை சாப்பிடும் போது நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
எப்பொழுதும் உணவு தட்டுகளை பாய், பேட் அல்லது சதுர வடிவ மரக்கட்டை போன்ற உயர்ந்த இடத்தில் மரியாதையுடன் வைத்திருங்கள். சாப்பிடும் தட்டை ஒரு கையால் பிடிக்கக் கூடாது. மேலும், தட்டில் மீதம் வைப்பதும் தவறாகும். அதனால் உங்களால் முடிந்த அளவு உணவு எடுத்துக்கொண்டு சாப்பிடுங்கள்.
அதேபோல் உணவு கிடைக்காமல் பலர் இவ்வுலகில் அவதிப்படுகிறார்கள். இந்த உணவை பெறுவதற்காக தான் அனைவரும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட மதிப்பு மிக்க இந்த உணவை நாம் சாப்பிடுவதற்கு முன்பு இதை நமக்கு அளித்த கடவுளை நிச்சயமாக வணங்க வேண்டும்.
மேலும், உணவு சாப்பிட தயாராகிவிட்டால் சாப்பாட்டிற்கு தான் முக்கிய கவனம் கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் பேசுவது, சிரிப்பது, உரையாடுவது, கோபப்படுவது, தேவையில்லாமல் சத்தம் போடுவது போன்றவற்றை செய்ய கூடாது.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…