கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பது எதற்காக தெரியுமா?
Evil eye-கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போட்டு வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இப்பதிவில் காணலாம்.
ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல வித பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்து வருகின்றார்கள். அதில் இந்த எலுமிச்சையை டம்ளரில் போட்டு வைக்கும் முறையும் ஒன்று. இதை வீடு மற்றும் வியாபார இடத்தில் வைத்து பின்பற்றப்படுகிறது.
பலன்கள்:
பொதுவாக எலுமிச்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
ஆன்மீக ரீதியாக கூற வேண்டும் என்றால் எலுமிச்சைக்கு தன்னை சுற்றி இருக்கும் இடத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை கொடுக்கும் பண்பை கொண்டுள்ளது.
நீருக்கும் ஒரு தன்மை உண்டு தண்ணீரானது தன்னைச் சுற்றி உள்ள ஆற்றலுக்கு தகுந்தாற்போல் மாறும் தன்மை உண்டு .கோவில்களில் தீர்த்தமாகவும் விளங்குகிறது, மற்றவர்களை சபிக்கவும் இந்த தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது.
அதாவது ஒருவரை சபிக்க வேண்டும் என்றால் தண்ணீரை ஒரு சிலர் மேலே ஊற்றிக் கொள்வார்கள். அதனால்தான் தண்ணீரானது பரிசுத்தமாகவும், சபிக்க கூடியதாகவும் விளங்குகிறது. ஆனால் அதில் எலுமிச்சம் பழத்தை போடும் பொழுது அந்த இடத்தில் உள்ள தீய எண்ணங்களையும் கண் திருஷ்டிகளையும் போக்கி நேர்மறை எண்ணத்தை கொடுக்கிறது.
தீய எண்ணத்தோடு நம் வீட்டிற்குகோ அல்லது வியாபார இடத்திற்கோ வரும்பொழுது அந்த எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி கூட இந்த கண்ணாடி கிளாசில் போடப்பட்ட எலுமிச்சைக்கு உள்ளது.
வைக்கும் முறை:
இந்த கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போடும் முறையை வெள்ளிக்கிழமையில் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்த தண்ணீரை ஒரு வாரம் வைத்து அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் அந்த பழைய தண்ணீரை கொட்டும் பொழுது மற்றவர்களின் கால்கள் படாத இடத்தில் கொட்டிவிட்டு புதிய தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைத்துக் கொள்ளலாம். இதனால் கண்திருஷ்டியும் கழியும் ,பொருளாதார முன்னேற்றம், வியாபார விருத்தியும் உண்டாகும்.
கண் திருஷ்டிக்கு என்று ஆன்மீகத்தில் பல வழிமுறைகளும் பூஜைகளும் இருந்தாலும் இந்த எளிமையான முறையான எலுமிச்சை மற்றும் தண்ணீர் பரிகாரம் அனைவராலும் செய்யக் கூடியது தான். இந்த பரிகாரத்தை செய்வதோடு நிறுத்தி விடாமல் அன்றன்றைக்கான உங்களுடைய முயற்சியையும் செய்து கொண்டு இருக்க வேண்டும்.இந்த எலுமிச்சை பரிகாரம் உறுதுணையாக மட்டுமே செயல்படும்.