வெள்ளி செவ்வாய் நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது தெரியுமா?

house cleaning

House Cleaning-மங்களகரமான நாட்கள் அல்லது நல்ல நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஏனென்றால் வெள்ளி செவ்வாய் என்பது மங்களகரமான நாளாகவும் இறைவழிபாட்டிற்குரிய நாளாகவும் கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில்  அந்நாளை வரவேற்கும் விதமாக முன்பே வீடுகளை சுத்தம் செய்து வைத்து விடவும்.

மங்களகரமான அந்த நாட்களை பூஜை செய்வதற்கும் இறைவழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று மங்கலத்தையும் நல்ல சக்தியும் தள்ளக்கூடாது என்பதால் நம் முன்னோர்கள் வெள்ளி செவ்வாய்களில் வீடு சுத்தம் செய்யக்கூடாது என கூறினார்கள்அதைத் தவிர மற்ற ஐந்து நாட்களிலும் வீடுகளை சுத்தம் செய்து கொள்ளலாம். குறிப்பாக திங்கள் வியாழன் கிழமைகளில் வீடுகளை சுத்தம் செய்யலாம்.

முன்பெல்லாம் வீடுகள் மண் தரைகளால் இருந்தது அதனை மொழுகுதல்  மட்டுமே செய்ய முடியும்.  வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுமே வெளியேற்றி  தான் செய்ய வேண்டிய நிலை இருந்தது . அதனால் நம்முடைய பெரியோர்கள் முன்கூட்டியே சுத்தம் செய்யும் பணிகளை செய்து முடித்து  விடுவார்கள். இதனால்  வெள்ளி செவ்வாய் நாட்களில் வீடு சுத்தம் செய்யக்கூடாது என சொல்லி வைத்தார்கள். அதன் பிறகு சிமெண்ட் தரையாக மாறிவிட்டது அப்போதும் பொருட்களை வெளியே எடுத்து வைத்து வீட்டை கழுவி வந்தனர் .

ஆனால் தற்போது அப்படி இல்லை பலரது  வீடுகளும் டைல்ஸ் மார்பில் போன்ற  தரைகள் வந்து விட்டது இதனை துடைத்தால்  மட்டுமே போதும். துடைத்தாலும் கூட நாம் வெள்ளி செவ்வாய்களில் செய்தலை தவிர்க்க வேண்டும், அப்படியே செய்தாக வேண்டுமென்றால் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அதாவது காலை ஆறு மணிக்கு முன்பாகவே சுத்தம் செய்து விட வேண்டும்.

இவ்வாறு முறைகளை நாம் கடைப்பிடித்தால் அந்த வீட்டில் சுபிட்சம் பெருகும், மகாலட்சுமியின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்