சுப நிகழ்ச்சிகளை ஏன் வளர்பிறையில் வைக்கிறோம் தெரியுமா?
நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
வளர்பிறையின் சிறப்புகள்
வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில் உயிர்ப்பு சக்திகள் அதிகமாக இருக்கும் காலமாகும். இந்த நேரத்தில் எதை செய்தாலும் விருத்தியாகும் . ஒரு விதை விதைத்தாலும் கூட விரைவில் வளரும். உயிர்ப்பு தன்மை அதிகம் என்பதால்தான் வளர்பிறையில் செய்யப்படுகிறது.
பல கோவில்களில் திருவிழாக்கள் பௌர்ணமி அன்றுதான் நடத்தப்படுகிறது. ஏனென்றால் அந்த காலத்தில் மின்சார வசதி , வாகன வசதி போன்றவை இல்லை என்பதால் திருவிழாக்கள் முடிந்து வீடு திரும்புவதற்கு நிலவின் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டார்கள், அதனால் நிகழ்ச்சிகளையும் திருவிழாக்களையும் வளர்பிறையிலேயே வைத்துக் கொண்டார்கள். அதையே இன்று நாம் கடைபிடிக்கின்றோம்.
அந்தக் காலத்தில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் நம் முன்னோர்கள் சூரியனையும் ,சந்திரனையும், திதிகளையும் அடிப்படையாக வைத்து தான் எந்த ஒரு செயலையும் செய்து வந்தனர். இதற்கு பல அறிவியல் காரணங்களும் உள்ளது என கூறப்படுகிறது.
தேய்பிறையில் செய்ய வேண்டியது
தேய்பிறை தினங்களில் கடன் சம்பந்தப்பட்ட கடன் வாங்குதல், திரும்ப செலுத்துதல் போன்றவற்றை வைத்துக் கொண்டால் கடன் குறையும் எனவும் நம்பப்படுகிறது.