சிவ வழிபாட்டில் நந்தீஸ்வரருக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் தெரியுமா?
பல சிவ ஆலயங்களிலும் மூலவருக்கு நேராக நந்தி பகவானை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். நந்தி சிறப்புகள், முக்கியத்துவமும் பற்றி என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நந்தீஸ்வரரின் சிறப்பு:
சிவபெருமானின் யோக அக்கினியில் தோன்றியவர் தான் நந்தி என புராணங்கள் கூறுகிறது. நந்தி என்றால் வளர்தல், நிலை பெற்றவர் மற்றும் மகிழ்ச்சி எனப் பொருள். சதாகாலமும் மகிழ்ச்சியாக இருப்பவர் நந்தி பகவான்.
சிவபெருமானின் காவல் தெய்வமாகவும் நந்தீஸ்வரர் உள்ளார். சைவ சமயத்தின் முதல் குருநாதர் நந்தியே ஆவார். பதஞ்சலி மற்றும் திருமூலருக்கு நந்தி பகவானே குருவாக இருந்தவர்..
பிரதோஷமும் நந்தி வழிபாடும்:
பிரதோஷ காலங்களில் சிவபெருமானின் வழிபாட்டிற்கு முன்பே நந்திக்கு தான் முதல் அபிஷேகமும் ஆராதனையும் நடக்கும். நந்தியின் அனுமதி பெற்ற பின் தான் சிவனை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் மட்டுமே முழு பலனையும் நாம் பெற முடியும். பிரதோஷ காலங்களில் நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கும் இடையில் சிவனை தரிசனம் செய்வது மிகச் சிறப்பாகும்.
பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி வரலாம், அவருக்கு வில்வ இலை ,அருகம்புல் போன்றவற்றால் வழிபாடு செய்து பாசிப்பருப்பு வெல்லம், பச்சரிசி, கலந்ததை நெய்வேத்தியமாக செய்து கொடுத்து வந்தால் கடன் தொல்லை நீங்கும் .நம் வாழ்வில் உள்ள இன்னல்களும் நீங்கும்.
பொதுவாகவே சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது ஏனென்றால் நந்தியின் மூச்சுக்காற்று சிவனின் மீது பட்டுக்கொண்டே இருக்கும். மத்தளம், நாதஸ்வரம் போன்ற கருவி கலைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நந்தி பகவானை வணங்கி வரலாம். ஏனென்றால் மத்தளத்தின் குருவும் நந்திதான்.
சிவனையும் நந்தியும் பிரிக்க முடியாது எனலாம் ஏனென்றால் அனைத்து சிவ ஆலயங்களிலுமே நந்தி இருக்கும். திருப்பெருந்துறை என்ற இடத்தில் மட்டும் நந்தி இல்லை என குறிப்பிடத்தக்கது.
எனவே சிவபெருமானின் முழு ஆசீர்வாதத்தையும் பெற நாம் நந்தி பகவானை வழிபாடு செய்வோம்.