எந்த நாளில் எந்த நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா?

lucky dress

Lucky colour -எந்த கிழமைகளில் எந்த நிறை உடை அணியலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் அனைவருக்குமே பிடித்த நிறம் என்று ஒன்று இருக்கும் . நிறங்கள் நம்மை அழகாக காட்டுவதோடு மட்டுமல்ல ஜோதிடத்தில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணம் உள்ளது என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அது ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது.

அதேபோல்தான் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் தொடர்பும் உள்ளது. அதனால் அந்த கிரகத்திற்கு உண்டான நாளன்று அதற்கான நிறத்தை அணியும் போது அது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

வாரத்தின் நாட்களும்.. நிறங்களும்..

ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாளாகும் .இந்த நாளில் சிகப்பு நிறம் அணிவது உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் .சூரிய பகவானுக்கு பிடித்த கோதுமையை தானமாக வழங்குவது நன்மையை பெற்று  தரும் .

திங்கள் கிழமை சந்திரனுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் அவருக்குரிய வெள்ளை நிற ஆடையை அணிவது நற்பலனை கொடுக்கும். இது உங்களை அந்த நாள் முழுவதும் அமைதியாக வைத்துக் கொள்ளும். மேலும் இந்த நாளில் பால், தயிர் போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உரிய தினமாகும். இந்நாளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தை பயன்படுத்தலாம். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் சரியாக அமையாவிட்டால் அவர்கள் தேவையில்லாத வன்முறைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

புதன்கிழமையில் புதன் பகவானுக்குரிய பச்சை நிற உடைய அணியலாம். குறிப்பாக இதய நோயாளிகள் ,கர்ப்பிணிகள் இந்த நிறத்தை அணிவது நல்ல பலனை கொடுக்கும். மேலும் சம நிலையான மனதையும் புதன் பகவான் ஏற்படுத்திக் கொடுப்பார்.

வியாழன் குருவிற்கு உகந்த நாளாகும் .இந்த நாளில் மஞ்சள் நிற உடையை அணிவது சிறப்பாகும். குருபகவான் நேர்மறை ஆற்றலை வழங்கக் கூடியவர்.நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள்  இந்நாளில் பாதாம், முந்திரி போன்றவற்றை தானமாக கொடுப்பது நல்லது.

வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரிய நாளாகும் .இந்நாள் அம்மனை வழிபட சிறந்த நாளாகவும் உள்ளது. இந்த தினத்தில் பல வண்ண நிறம் கொண்ட உடை  மற்றும் சுக்கிரனுக்கு உரிய வெள்ளை நிறங்களை அணியலாம். மேலும் சுக்கிரன் பலவீனமாக இருக்கும் ஜாதகக்காரர்கள் ரோஜா, மல்லி, தாமரை போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.

சனிக்கிழமை சனி பகவானுடைய வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். இன்றைய தினத்தில் நீங்கள் கருப்பு மற்றும் நீல  நிற உடையை அணிவது நல்ல பலன்களை கொடுக்கும். சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் தவறான இடத்தில் இருந்தால் மனச்சோர்வு மற்றும் வன்முறைகளை உருவாக்கலாம்.

ராகு பகவானுக்கு உரிய நிறம் சாம்பல் மற்றும் நீல நிறமாகும். ராகு பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட கற்பூரம் ,சந்தனம் போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

கேது பழுப்பு நிறத்தை  விரும்பக் கூடியவர். கேதுவிடம்  பாதுகாப்பாக இருக்க விரும்புபவர்கள் இஞ்சி  மற்றும் கற்பூரத்தை தானமாக வழங்கலாம்.

இவ்வாறு அந்த நாளுக்குரிய நிறங்களை அணிந்தால் அந்நாள் உங்களுக்கு சாதகமாகவும் சிறப்பாகவும் அமையும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்