Tallest saneeswaran temple-பெரும்பாலும் அனைத்து கோவில்களிலுமே நவகிரகங்கள் மிகச் சிறிய அளவில்தான் இருக்கும் ஆனால் இந்த ஸ்தலத்தில் ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் மிகப்பிரமாண்டமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திருத்தலம் அமைந்துள்ள இடம் :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் மொரட்டாண்டி என்ற கிராமத்தில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் நவகிரக பரிகார ஸ்தலம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள் :
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை இங்குதான் அமைந்துள்ளது, 27 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எல்லா கோவில்களிலும் கோபுரம் தான் அமைந்திருக்கும் ஆனால் இங்கு கோபுரமாக ஸ்வர்ண கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இது இக்கோவிலின் சிறப்பாகும். சனி பகவான் மகர கும்ப ரசிக்குரியவர் அதனால் தான் கோபுரம் கலசத்தில் அமைக்கப்பட்டுள்ளது .
இங்கு சனி பகவானின் வாகனமாக கழுகு அமைக்கப்பட்டுள்ளது ஏனென்றால் இங்கு இருப்பது பொங்கு சனி என கூறப்படுகிறது அதாவது நம்முடைய முதல் 30 வயது வரை மங்கு சனி எனவும் இந்த சனிக்கு காகை வாகனமாகவும் உள்ளது, அடுத்த 60 – 90வயது பொங்கு சனியாகும் பொங்கு சனியின் வாகனம் கழுகு எனக் கூறப்படுகிறது ,அடுத்த 90 -120 மரண சனி ஆகும்.
மேலும் 54 அடி உயரத்தில் விநாயகர் சிலை தங்க மூலம் பூசப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு நவகிரகங்களின் சிலைகளுமே 12 அடி உயரத்தில் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எழுந்துள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்களுக்கு அருகில் அதற்குரிய மரங்களும், 60 வருடங்களுக்கு உண்டான மரங்களும் ,27 நட்சத்திரங்களுக்கு உண்டான மரங்களும் மொத்தம் 108 மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் சனியின் அம்சமாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. இதனால்தான் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. சனி பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் மற்றும் சனி பெயர்ச்சி நடக்கும் போதும் இங்கு வந்து தரிசனம் செய்வது மிகச் சிறப்பாகும். ஆகவே ஒரு முறையேனும் இங்கு வந்து மூலவராக இருக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்து செல்லுங்கள் .
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…