செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

மீன்கள் அதிகமாக விளையாடும் குளத்தின் அருகே தோன்றியதால் மீன்குளத்தி பகவதி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

meenkulathi amman (1)

சென்னை –மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.

கோவில் அமைந்துள்ள இடம்;

கேரள மாநிலம் பாலக்காடு அருகில் 18 கிலோமீட்டர் தொலைவில் பல்லசனா பகுதியில்   மீன்குளத்தி பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது .  கோயம்புத்தூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .மதுரை மீனாட்சி அம்மனே  இங்கு மீன் குளத்தை பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஸ்தல வரலாறு;

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீர சைவ வேளாளர் வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் அப்பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் வணிகத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து குலதெய்வமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் கேரளா மாநிலத்தில் உள்ள பல்லசனா  பகுதியில் தங்கினர் ,அப்பகுதி  மிகுந்த வளமான பகுதியாக இருந்தது அங்கேயே வைர வணிகத்தை செய்து வளமடைந்தனர் .வெளியில் வைர வணிகத்திற்கு செல்வதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மனை  தரிசித்து வருவார்கள் . ஒரு முறை வணிகர் மதுரை செல்வதற்கு முன்பு அங்குள்ள குளத்தின்  அருகில் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு நீராட சென்றார். அப்பொழுது அவர் குளித்துவிட்டு கரையேறி வரும் பொழுது அந்தப் பொருள்களை எடுக்க முயன்றார் ஆனால் அவற்றை அசைக்கக்கூட முடியவில்லை.

பிறகு  தன் குடும்பத்தினரை அழைத்து முயற்சி செய்து பார்த்தார் அப்போதும் முடியாமல் போனது பிறகு அசரீரி ஒலித்தது. இந்த தள்ளாடும் வயதில் என்னை தரிசிக்க மதுரை வர வேண்டாம் உனக்காக நானே இங்கு வந்துள்ளேன் என்று ஒலித்தது .இதனால் அம்மனுக்கு அங்கேயே கோவில் எழுப்பினர். கோவில் கருவறைக்குள் அம்மன் பகவதி அம்மனாக அருள் பாலிக்கிறார் . மீன்கள் அதிகமாக விளையாடும் குளத்தின் அருகே தோன்றியதால் மீன்குளத்தி பகவதி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.

நடை திறக்கும் நேரம்;

காலை 5 மணி  முதல் 10:30 மணி வரையிலும்  மாலை 5.30 -7.30  வரை வழிபாட்டிற்காக நடை திறந்திருக்கும். மேலும் செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு போன்ற நாட்களில் காலை 5 மணி முதல் 12. 30 வரை நடை திறந்து  வழிபாடுகள் நடத்தப்படும். அம்மாவாசை தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

சித்திரை மாதத்தில் அம்மன் அவதரித்ததால் அந்த மாதத்தில் அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். மேலும் மாசி மாதம் 8 நாட்கள் மாசி திருவிழா நடத்தப்படுகிறது.. அங்குள்ள பைரவர் சன்னதி அருகில்  தேங்காய் வாங்கி அதை தலையை சுற்றி சிதறு தேங்காயாக உடைத்தால் கண் திருஷ்டி மற்றும் தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது.

பலன்கள்;

குளத்தில் நீராடி அம்மனை தரிசித்தால் திருமண தடை நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக வணிகத் தொழில் செய்பவர்கள் அங்கு சென்று வந்தால் தொழில் விருத்தி ஆகும் .மன தெளிவு கிடைக்கும் .பஞ்சத்தில் வந்தவர்கள் பசியாறி செல்வ வளம் அடைந்தனர் என்பது இக்கோயிலின் மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.

கோவிலின் கட்டுப்பாடுகள்;

ஆண்கள் மேல் சட்டை ,பனியன் அணிய கூடாது .வேஷ்டி கட்டிக் கொண்டு தான் உள்ளே வருவதற்கான அனுமதி உள்ளது.

முதன் முதலில் தொழில் செய்ய துவங்குபவர்களும், தொழிலில் தடை மற்றும் தோல்வி இருப்பவர்களும் அன்னை மீன்குளத்தி பகவதி அம்மனை ஒரு முறை வழிபட்டு வந்தால் தொழில் தடை நீங்கி தொழில் விருத்தி பெற்று செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்