அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம் எப்போது வருகிறது தெரியுமா?.

ஜித் என்றால் வெற்றி அபிஜித் என்றால் உடனடியாக வெற்றியை தரக்கூடிய நேரமாக கூறப்படுகிறது. மேலும் பிரம்மாவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரமாகவும் கருதப்படுகிறது.

abijith natchathiram (1)

சென்னை –அபிஜித் நேரம் என்றால் என்ன அபிஜித் நேரத்தின்  சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன?

நமக்கு தெரிந்தது எல்லாம் 27 நட்சத்திரம் தான். ஆனால் மொத்தம் 28 நட்சத்திரங்கள் உள்ளன என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. 28 வது நட்சத்திரமாக  கூறப்படுகிறது . இது மறைக்கப்பட்ட நட்சத்திரம் ஆகும் . அபிஜித் நட்சத்திரத்தின் அதி தேவதை ஆக பிரம்மா விளங்குகிறார். இந்த பூலோகத்தில் பிரம்மாவிற்கு  பூஜைகள் இல்லை என்பதால் அபிஜித் நட்சத்திரம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையாக இந்த அபிஜித் நேரம் சொல்லப்படுகிறது  .

உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதமும் திருவோணம் நட்சத்திரம் முதல் பாதமும் சேரும் காலங்கள் அபிஜித் நட்சத்திரம் ஆக கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு என தனியான  நாட்கள் ஒதுக்கப்படவில்லை .ஆனால் தினமும் இதற்கான அபிஜித் நேரம் வருகின்றது.

அபிஜித் நட்சத்திரத்தின் சிறப்பு ;

ஜித் என்றால் வெற்றி அபிஜித் என்றால் உடனடியாக வெற்றியை தரக்கூடிய நேரமாக கூறப்படுகிறது. மேலும் பிரம்மாவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரமாகவும் கருதப்படுகிறது.இந்த நேரத்தில் திருமணம் முதல் அனைத்து சுப காரியங்களையும்  செய்து கொள்வது மிக மிக சிறப்பாக சாஸ்திரம் கூறுகின்றது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்த அபிஜித்  நேரத்தை கணக்கிட்டு கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அபிஜித் நேரத்தில் செய்யப்படும் காரியங்களுக்கு எந்த தோஷமும் கிடையாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றது. ராகு காலம், எமகண்டம் ,அஷ்டமி, நவமி ,கரிநாள், செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என்று எந்தவித தடங்களும் இல்லாத நேரமாகும்.மேலும்  ராமர் ராவணனை ஜெயிக்க மிகப் போராடினார். ஏனெனில் ராவணன் தீவிர சிவபக்தர் .அப்போது ராமரிடம் அகத்தியர்  இந்த அபிஜித் நேரத்தை பயன்படுத்த சொல்கிறார். இந்த நேரத்தில் ராமர் ராவணனை அம்பை  எய்து ராவணனை  சாய்த்தார் என்று புராணங்கள் கூறுகின்றது.

அபிஜித் நட்சத்திரம் வரும் நேரம்;

பிரம்ம முகூர்த்தம் சூரிய உதயத்திற்கு முன்பு வரும். அபிஜித் நேரம் சூரிய உதயத்திலிருந்து ஆறு மணி நேரம் கழித்து வருவதாகும் . இதை  உச்சி வேலை பொழுது  என்று கூறுவோம் ,அதாவது சூரியன் உச்சி கால நேரத்தில் இந்த அபிஜித் முகூர்த்தம் வருகின்றது. சரியாக கணக்கிட்டு கூற வேண்டுமென்றால் 11; 45 லிருந்து 12:15 வரை அபிஜித் நேரமாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் ,கும்பாபிஷேகம்,கையெழுத்திடுதல் ,  போன்ற அனைத்து சுப காரியங்களையும் செய்வதன் மூலம் மென்மேலும் வளர்ந்து வெற்றி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்