பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!
பிரம்ம முகூர்த்தம்– பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .
பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ?
பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளது. இதில் இரவின் கடைசி முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.
இந்த நேரத்தில் சரஸ்வதியும் பிரம்மனும் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. சூரியன் உதயமாகும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் தொடங்கிவிடும், இது ஒவ்வொரு நாளும் மாறுபடும்.
உதாரணமாக இன்றைக்கு சூரியன் ஆறு மணிக்கு உதிக்கிறது என்றால் அதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு அதாவது நான்கு முப்பதுக்கு ஆரம்பித்து விடும். பொதுவாக கூற வேண்டும் என்றால் அதிகாலை 4 -6 பிரம்ம மூகூர்த்தம் ஆகும்.
பல மதத்தினரும் அதிகாலையில் இந்த நேரத்தில் ஜெபம் செய்வது, தியானம் மேற்கொள்வது, இஸ்லாமியர்களின் முதல் தொழுகை என மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பெயர் கூறிக் கொண்டாலும் இந்து மதத்தில் இருந்து தோன்றியதுதான் பிரம்ம முகூர்த்தம்.
பல வெற்றியாளர்களின் ரகசியமான நேரம் இந்த நேரம் தான் . நமது மனநிலையில் நிம்மதி தரக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் நாம் எழுந்து விட்டோம் என்றால் அன்றைய நாள் நீண்ட நேரம் நமக்கு கிடைக்கும். நமக்காக கூட நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியவை:
இந்த நேரத்தில் கடவுளின் மந்திரங்களை உச்சரிப்பதும் , கடவுள் வழிபாட்டிற்கு உகந்த நேரம் .அதிகாலையில் குளித்துவிட்டு பூஜை செய்வது விளக்கேற்றுவது போன்றவற்றை மேற்கொள்வது இரட்டிப்பான பலன்களை கொடுக்கும்.
தியானம் மேற்கொள்ள உகந்த நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெட்ட வெளியான பகுதியில் அமர்ந்து இயற்கையான காற்றை சுவாசித்து தியானம் செய்வதன் மூலம் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த நேரத்தில் நமது உடல் புதுப்பிக்கப்படுகிறது.
மேலும் புத்தகம் படித்தல் மற்றும் இன்றைய நாளுக்கான தீர்மானங்களை திட்டம் செய்வதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக கிடைக்கக்கூடிய நேரம் ஆகும்.
இந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்களின் பலன்கள் இரட்டிப்பாகவும் விரைவிலும் நமக்கு வந்து சேரும்.உங்கள் ஆசைகள் எதுவாயினும் இந்த நேரத்தில் தொடர்ந்து கூறி செபிக்கும் போது விரைவில் நடக்கும் .
பிரம்ம முகூர்த்தத்தில் செய்யக்கூடாதவைகள்:
இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இரவில் நாம் எடுத்துக் கொண்ட உணவே பாதி செரித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் நாம் ஏதேனும் உணவை சாப்பிட்டால் அது அஜீரணத்தை ஏற்படுத்தும்.
கடுமையான வேலைகளை செய்யக்கூடாது இது ஆயிலை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தேவையில்லாத பேச்சுக்களை பேசக்கூடாது.
எனவே பிரபஞ்ச சக்தியும் தெய்வ சக்தியும் நிறைந்த இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.