அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :அனைத்து கோவில்களிலும் மூலவர் சிலை கருவறைக்குள் இருக்கும் ஆனால் அத்திவரதர் மூலவர் சிலையானது தெப்பக்குளத்திற்குள் இருக்கும். மேலும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றால் அத்தி வரதரை தரிசிக்க 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஸ்ரீரங்க ரங்கநாதர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களுக்கு முன்பு தோன்றியது காஞ்சிபுரம் வரதராஜன் கோவிலாகும் .
சுமார் 2000 வருடம் பழமையான கோவில் . ஆனால் இங்குள்ள அத்திவரதர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவராக கூறப்படுகிறது .அதாவது முதல் யுகமான க்ருப யுகத்தில் தோன்றியவராவார் . இந்த பெருமாளுடைய திருவுருவம் அத்தி மரத்தால் ஆனது .அத்தி மரக்கட்டைக்கு புவி ஈர்ப்பு விசையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உள்ளது. தண்ணீரில் ஊற ஊற அதன் பளபளப்பு கூடும் என்பதால் தான் இன்றும் பொலிவுடன் வரதராஜ பெருமாள் காணப்படுகிறார்.
அத்திவரதர் தோன்றிய வரலாறு;
ஒருமுறை கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியிடம் நான் தான் உயர்ந்தவள் என கூற ..அதைக் கேட்டு சிரித்த மகாலட்சுமி தாயார் உன் அருள் பெற்ற புலவர்கள் வறுமையை போக்க மன்னன் இடம் செல்கிறார்கள் அதற்கு அர்த்தம் என்ன என கேட்க இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது .இந்திரன் மகாலட்சுமி தாயார் தான் உயர்ந்தவர் எனக் கூற சரஸ்வதிக்கு கோபம் வந்து இந்திரன் யானையாக போகும்படி சாபம் விடுகிறார். அவரும் காஞ்சிபுரம் பகுதியில் யானையாக அலைகிறார். சரஸ்வதி பிரம்மாவிடம் சென்று யார் உயர்ந்தவர் என கேக்க பிரம்மாவும் மகாலட்சுமி தான் உயர்ந்தவர் எனக் கூற தன் கணவனே தனக்கு எதிராக சொன்னதனால் அதை தாங்க முடியாத சரஸ்வதி பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்து விடுகிறார்.
இதனால் பிரம்மாவால் படைப்பு தொழில் செய்ய முடியவில்லை. மகாவிஷ்ணுவிடம் சென்று பிரச்சனையை கூற மகாவிஷ்ணுவும் அவரை அத்தி வனத்தில் ஒரு அஸ்வமேத யாகம் செய்யும்படி கூறுகிறார்.. சரஸ்வதியின் மற்றொரு அம்சமான சாவித்திரியுடன் யாகம் செய்கிறார். இதைப் பார்த்த சரஸ்வதிக்கு கோபம் அதிகமாகி யாகசாலையை மூட இருளை ஏற்படுத்துகிறார்.. அந்த இடத்தில் நாராயணன் தோன்றி இருளை போக்குகிறார். பிரம்மாவின் யாகத்தை கெடுப்பதற்கு பல வழிகளிலும் சரஸ்வதி தேவி முயற்சி செய்கிறார்.
ஆனால் அதை நாராயணன் தடுத்து நிறுத்துகிறார். ஒரு வழியாக யாகமும் முடிந்து விட்டது. ஹோம குண்டத்தில் இருந்து அத்திவரதர் தேவராஜனாக தோன்றி பிரம்மாவின் சிருஷ்டி தண்டத்தை கொடுக்கிறார் .இதை பார்த்த பிரம்மாவும் மகிழ்ச்சியடைந்து யானையாக இருக்கும் இந்திரனுக்கு சாப விமோச்சம் அளிக்குமாறு கூறுகிறார். அப்படியே அங்கு யானை மலையை உருவாக்கி அங்கே தங்கி விடுகிறார். தெய்வசக்தி கொண்ட அத்திமரத்தை விஷ்ணு கண்டுபிடித்து அதில் அத்தி வரதனின் சிலையை செய்து மீதமுள்ள துண்டுகளை ஆற்றில் போடச் சொல்கிறார் .அதனால் அங்கு நதியாக இருக்கும் சரஸ்வதியின் கோபம் தணிந்து பிரம்மனைச் சேருகிறார் .
அந்த அத்தியாயானது உடும்பற அத்தி எனவும் குறிப்பிடப்படுகிறது .இந்த உடும்பறஅத்தி உக்கிர மனநிலையை போக்கும் வல்லமை உடையது. அதனால் தான் புத்தர் இந்த மரத்தடியில் தவம் செய்திருக்கிறார். புத்தர் தவம் செய்து ஞானம் பெற்றதால் இது போதிமரம் என அழைக்கப்பட்டது. அழகிய அத்திவரதனை ஆனைமலை என்கிற அஸ்திகிரியில் பிரம்மன் பிரதிஷ்டை செய்கிறார்.யாகத்தில் தோன்றிய மூர்த்தியை உற்சவராக எழுந்தருள செய்திருக்கின்றனர். அத்தி மரத்தால் செய்யப்பட்ட தேவராஜன் சிலை தான் இன்று குளத்தில் இருக்கிறது.
40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனை செய்து மீண்டும் வரதராஜ பெருமாள் குளத்துக்குள் வைக்க படுகிறார் . யாக குண்டத்தில் தோன்றியதால் அவரை குளிர்விக்க இப்படி குளத்தில் வைத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர் .மேலும் முகலாய மன்னர்களின் படையெடுப்பில் இருந்து அத்திவரதரை காப்பாற்ற அனந்த சரஸ் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதன் உண்மை வரலாறு என்னவென்றால் காஞ்சிபுரம் முழுவதும் ஒரு காலத்தில் அத்திமர காடாக இருந்துள்ளது.
அத்தி என்றால் சமஸ்கிருதத்தில் உடும்பர விருட்சம் எனக் கூறுவார்கள். இது 24 மணி நேரமும் பிராணவாயுவை வெளிப்படுத்தக் கூடியது. இந்த அத்திமரம் அஷ்டம சக்திகளை அழிக்க கூடியதாகவும், இந்த மர பட்டை தோல் நோயை குணப்படுத்த கூடியது எனவும், அத்தி மரத்தின் பால் வெட்டுக்காயத்தை ஆற்றும் தன்மை கொண்டது எனவும் சொல்ல படுகிறது .இதனுடைய வேர் கசாயம் மனிதனின் நாடிச் சக்கரங்களை எழுச்சி அடைய செய்யும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நீரும் அத்தி மரமும் சேரும்பொழுது அதன் ஆற்றல் அதிகமாகும் அதனால்தான் அத்தி வரதரை நீரில் எழுந்தருள செய்துள்ளனர் .
மேலும் விண்வெளியில் உள்ள அலைகளை நாம் எண்ண அலைகளுடன் இணைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த மரத்தின் தீட்சை கிடைத்தால் பெரிய காரியங்களை கூட நொடி பொழுதில் முடிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் மந்திரங்களை கிரகித்து தனக்குள் தேக்கி வைத்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்டது. இந்த உடும்பர அத்தி மரம் உள்ள நாட்டின் மன்னரை எந்த எதிரிகளாலும் வெல்ல முடியாது என சொல்லப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் பல்லவர்கள், சோழர்கள் ,சேரர்கள், பாண்டியர்கள், மௌரியர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள் ,மராட்டியர்கள் என பல அரசர்களும் இந்த அத்தி வரதர் சிலைக்கு ஆசைப்பட்டு அபகரிக்க நினைத்துள்ளனர் . இதனை மறைக்க மன்னராட்சி காலத்தில் பல போராட்டங்களும் நடந்ததாக கூறப்படுகிறது .
இந்த கலியுகத்தில் அத்திவரதரின் பொக்கிஷங்களை பிரபலப்படுத்தி ஆபத்தை விளைவிக்க வேண்டாம் என அத்தி வரதரை குளத்திற்குள்ளே பத்திரப்படுத்தி உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிவதற்குள் ஒருமுறை அல்லது இரு முறை மட்டுமே இந்த அத்தி வரதரை தரிசனம் செய்ய முடியும். இவரை ஒரு முறை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் இரு முறை தரிசனம் செய்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.