மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு தெரியுமா?

Published by
K Palaniammal

மதுரை சித்திரை திருவிழா  -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம்.

மீனாட்சி அம்மன் வரலாறு :

மீனாட்சி அம்மன் மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும்  நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல்  சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவபெருமானின் அருளால் மீனாட்சி யாகசாலை அக்னியில்  தோன்றி அவதரிக்கிறார். இதனால் தடாமை அங்கயர் கன்னி என்ற பெயரும் மீனாட்சி அம்மனுக்கு உண்டு.

மீனாட்சிக்கு பிறப்பிலேயே மூன்று மார்பகங்களை கொண்டிருக்கிறார், தன்னை மணம் முடிப்பவரை காணும் போது அந்த நடு மார்பகம் மறைந்து விடும் என்றும், கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன் அந்த மார்பகம் மறைந்து விடுகிறது .இதனை உணர்ந்த மீனாட்சி அவர் மீது காதல் கொள்கிறார். சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக மீனாட்சி கரம் பிடிக்கிறார்.

மீனாட்சி அம்மன் கருவறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டது என தல வரலாறு கூறுகிறது. மேலும் மீனாட்சி அம்மனின்  திருமேனி சிலை மரகதக் கல்லால் ஆனதாகும்.

இக்கோவில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு தான் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள்  நடத்தப்படுகிறது .

சித்திரை திருவிழா உருவான வரலாறு :

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதம் நடைபெறுகிறது. கள்ளழகர் மதுரை பகுதியில் உள்ள சோழவந்தான் அருகில் தேனூர் என்ற இடத்தில் தான்  முதலில் ஆற்றில் இறங்கினார் .

அங்கு தவளை முனிவருக்கு சாபம் விமோசனம் கொடுத்தார் என்பதுதான் வரலாறு. ஆனால் மீனாட்சி கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் பாண்டியர் ஆட்சி காலத்தில் வெவ்வேறு மாதங்களில் நடந்ததாக கூறப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத் தன்றும் ,மீனாட்சி பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடந்தது. சைவ சமயத்தினர் மீனாட்சி திருக்கல்யாணத்தை விமர்சையாக கொண்டாடுவதும், வைணவ சமயத்தினர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை  கொண்டாடுவதுமாக இருந்தது.

திருமலை நாயக்கர் வைணவ சமயத்தை பின்பற்றுவராக  இருந்தாலும், மீனாட்சி அம்மையின் மீது அதிகபத்திக் கொண்டவர். இவ்வாறு சமய வேறுபாடை பார்க்காத திருமலை நாயக்கர், இதுபோல் மக்களும் இருக்க வேண்டும் என எண்ணினார்.

மதுரை மீனாட்சி கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்து கொடுத்தார். அந்த வகையில் அவர் கொடுக்கப்பட்ட தேர்  மிகப்பெரியதாக இருந்தது ,அந்த தேரை இழுக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மதுரையை அடுத்த ஊர்களில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான் திருமலை நாயக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் தேரோட்டம் ,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் ஆகியவற்றை ஒன்றிணைத்தார்.  இந்த சித்திரை திருவிழா மதுரையில் விழா கோலமாக காணப்பட்டது.

இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த திருவிழாக்களை திருமலை நாயக்கர் ஒன்றிணைத்து ஊர் கூடி மக்களை ஒன்றாக்கி வாழ வழி செய்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது .

 

Recent Posts

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

1 hour ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

2 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

3 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

4 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

4 hours ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

4 hours ago