மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம்.
மீனாட்சி அம்மன் வரலாறு :
மீனாட்சி அம்மன் மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிவபெருமானின் அருளால் மீனாட்சி யாகசாலை அக்னியில் தோன்றி அவதரிக்கிறார். இதனால் தடாமை அங்கயர் கன்னி என்ற பெயரும் மீனாட்சி அம்மனுக்கு உண்டு.
மீனாட்சிக்கு பிறப்பிலேயே மூன்று மார்பகங்களை கொண்டிருக்கிறார், தன்னை மணம் முடிப்பவரை காணும் போது அந்த நடு மார்பகம் மறைந்து விடும் என்றும், கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன் அந்த மார்பகம் மறைந்து விடுகிறது .இதனை உணர்ந்த மீனாட்சி அவர் மீது காதல் கொள்கிறார். சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக மீனாட்சி கரம் பிடிக்கிறார்.
மீனாட்சி அம்மன் கருவறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டது என தல வரலாறு கூறுகிறது. மேலும் மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் ஆனதாகும்.
இக்கோவில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு தான் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது .
சித்திரை திருவிழா உருவான வரலாறு :
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதம் நடைபெறுகிறது. கள்ளழகர் மதுரை பகுதியில் உள்ள சோழவந்தான் அருகில் தேனூர் என்ற இடத்தில் தான் முதலில் ஆற்றில் இறங்கினார் .
அங்கு தவளை முனிவருக்கு சாபம் விமோசனம் கொடுத்தார் என்பதுதான் வரலாறு. ஆனால் மீனாட்சி கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம் பாண்டியர் ஆட்சி காலத்தில் வெவ்வேறு மாதங்களில் நடந்ததாக கூறப்படுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத் தன்றும் ,மீனாட்சி பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடந்தது. சைவ சமயத்தினர் மீனாட்சி திருக்கல்யாணத்தை விமர்சையாக கொண்டாடுவதும், வைணவ சமயத்தினர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கொண்டாடுவதுமாக இருந்தது.
திருமலை நாயக்கர் வைணவ சமயத்தை பின்பற்றுவராக இருந்தாலும், மீனாட்சி அம்மையின் மீது அதிகபத்திக் கொண்டவர். இவ்வாறு சமய வேறுபாடை பார்க்காத திருமலை நாயக்கர், இதுபோல் மக்களும் இருக்க வேண்டும் என எண்ணினார்.
மதுரை மீனாட்சி கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்து கொடுத்தார். அந்த வகையில் அவர் கொடுக்கப்பட்ட தேர் மிகப்பெரியதாக இருந்தது ,அந்த தேரை இழுக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மதுரையை அடுத்த ஊர்களில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் திருமலை நாயக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் தேரோட்டம் ,கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் ஆகியவற்றை ஒன்றிணைத்தார். இந்த சித்திரை திருவிழா மதுரையில் விழா கோலமாக காணப்பட்டது.
இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த திருவிழாக்களை திருமலை நாயக்கர் ஒன்றிணைத்து ஊர் கூடி மக்களை ஒன்றாக்கி வாழ வழி செய்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது .