எந்தெந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் தெரியுமா?
சந்தனத்தால் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சென்னை – இந்து சமயத்தின் படி எந்த ஒரு செயலை துவங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தூங்குவது வழக்கம் , அதனால்தான் விநாயகர் முதற்கண் கடவுளாக போற்றப்படுகிறார்.
எந்தப் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன்?
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் வசதியான வாழ்க்கை அமையும்.
மண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் உயர் பதவி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.
விபூதியில் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
புற்று மண்ணில் பிள்ளையாரை பிடித்து வழிபட்டால் தொழில் லாபம் பெருகும், ஆரோக்கியம் கிடைக்கும், விவசாய விளைச்சல் பெருகி லாபம் கிடைக்கும்.
சந்தனத்தால் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வெல்லத்தால் விநாயகரை வைத்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
உப்பு மற்றும் வேப்ப மரத்தால் செய்த விநாயகரை வழிபட்டு வந்தால் எதிரி தொல்லை நீங்கும்.
குங்குமத்தில் பிள்ளையாரை பிடித்து வழிபட்டு வந்தால் தோஷம் அகலும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள.
வெள்ளெருகால் ஆன விநாயகரை வழிபட்டால் தீய சக்தி நம்மை அண்டாது , சிந்தனைகள் மேலோங்கும், சொத்துக்கள் பெருகும் .
வெண்ணையில் விநாயகரை பிடித்து வைத்து வழிபட்டால் நாள்பட்ட நோய் மற்றும் கடன்கள் தீரும், உள்ளமும் உடலும் நலம் பெறும்.
பசுஞ்சானத்தால் விநாயகரை பிடித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும், குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று இவ்வாறு வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் .
பச்சரிசி மாவால் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் விவசாயத்தில் வளர்ச்சி உண்டாகும்.
ஆகவே உங்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் விரைவில் விநாயகர் உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருவார்.