வீட்டின் வறுமை ஒழிய மளிகை பொருளை எந்த நாளில் வாங்க வேண்டும் தெரியுமா?
ஆன்மிக தகவல் –எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்கினால் நம் இல்லத்திற்கு நல்லது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.
மளிகை பொருள்கள் ;
வீட்டில் வறுமை நீங்க தானிய பொருள்கள் மற்றும் மளிகை பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். குறிப்பாக வளர்பிறையில் வரும் வெள்ளியில் வாங்கினால் குபேர சம்பத்து பெற்று தரும். இந்நாளில் ஊறுகாய் போன்ற பொருள்களை வாங்குவது நல்லது.
எண்ணெய் பொருட்கள் ;
சமையலுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு எண்ணெய் வாங்கினாலும் புதன்கிழமை வாங்கலாம். ஆனால் சரியான சில்லறையை கொடுத்து வாங்க வேண்டும். அதிக பணம் கொடுத்து மீதி பணம் வாங்க கூடாது.
எண்ணையை தவிர மற்ற எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதிக பணம் கொடுத்து மீத சில்லறை இருக்குமாறு வாங்கிக் கொள்ள வேண்டும் .சரியான சில்லறை கொடுத்து வாங்குவதை தவிர்க்கவும். ஏனென்றால் அது நம்மிடம் உள்ள பண இருப்பை துடைத்து விடும்.
மேலும் சாப்பிடும் உணவுப் பொருள்களை முழுவதுமாக துடைத்து எடுக்கக் கூடாது. கொஞ்சமாவது பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
தங்க ஆபரணம் ;
தங்கம், வெள்ளி போன்ற நகைகளை வாங்கும் போது சுக்கிர ஓரையில் வெள்ளிக்கிழமையில் வாங்குவது சிறப்பாகும். அதிலும் குறிப்பாக குளிகை நேரத்தை பார்த்து வாங்க வேண்டும். குளிகையில் எந்த பொருளை வாங்கினாலும் மென்மேலும் பெருகும் .
பர்னிச்சர் பொருட்கள் ;
கட்டில், பீரோ போன்ற வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கும் போது குருவிற்கு உகந்த வியாழக்கிழமையில் சுக்கிர ஓரையில் வாங்க வேண்டும். ஏனென்றால் சுக்கிரன் சுகபோக வாழ்வை தருபவர்.
நம் வீட்டிற்கு தேவையான எந்த ஒரு அலங்காரம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை சுக்கிர ஓரையில் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். கண்ணாடி பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வாங்குவது சிறந்தது.
இவ்வாறு மங்களகரமான பொருட்களை மங்களகரமான நாளில் வாங்கும் போது நம் வாழ்வில் மங்களகரமான நிகழ்வுகள் வரும்.