வாஸ்து படி வீட்டில் கண்ணாடி ,கடிகாரம் எந்த திசையில் வைக்கணும் தெரியுமா?

Vastu-கண்ணாடி மற்றும் கடிகாரத்தை எந்த திசையில் வைக்கலாம் என்றும் வைக்கக்கூடாத இடங்கள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
கண்ணாடி வைக்கும் திசை :
அனைவரது இல்லங்களிலுமே அலங்காரம் செய்வதற்காக கண்ணாடி இருக்கும். இந்த கண்ணாடியை ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் வைத்திருப்பார்கள். இவ்வாறு வைப்பது சிறப்பாகவும், மிக அவசியமாகவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் வருவதை தடுக்கும் சக்தி கண்ணாடிக்கு உள்ளது. கண்ணாடி சந்திரனின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும் .சந்திரன் ஆனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கும். அதேதான் கண்ணாடியும் செய்யும். கண்ணாடியை வரவேற்பு அறையிலும் வைத்துக் கொள்ளலாம்.
பூஜை அறையில் வைப்பதால் நேர்மறை ஆற்றலை பெருக்கிக் கொடுக்கும். கிழக்கு மற்றும் வடக்கு திசையில் தான் கண்ணாடி வைக்க வேண்டும். அதாவது கண்ணாடியை கிழக்கு சுவற்றில் மாற்றினால் அது மேற்கு நோக்கி பார்த்தவாறு இருக்க வேண்டும். கண்ணாடியை செவ்வக வடிவில் வைத்துக் கொள்வது சிறப்பாகும்.
கண்ணாடியை வைக்க கூடாத இடங்கள்:
கண்ணாடியை படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது கணவன் மனைவியின் அன்னியோனியத்தை பாதிக்கும். ஒருவேளை இருந்தால் அதை இரவில் தூங்கும் போது ஒரு துணியை கொண்டு மூடி வைத்து விட வேண்டும்.
மேலும் கன்னி மூலையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உடைந்த மற்றும் பழைய கண்ணாடிகளை உடனே மாற்றி விடுவது நல்லது ஏனென்றால் இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
கடிகாரம்:
கடிகாரம் என்பது நேரத்தை பிரதிபலிக்க கூடியது. இது சூரியனை குறிக்க கூடியதாகும். இந்த கடிகாரத்தை கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் தான் மாற்ற வேண்டும். ஓடாத கடிகாரத்தை வைத்திருக்கக் கூடாது. மற்றபடி கடிகாரத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் மரத்தால் செய்யப்பட்ட கடிகாரமும், சனி ஆதிக்கம் பெற்றவர்கள் இரும்பால் செய்யப்பட்ட கடிகாரமும் வைத்துக் கொள்வது சிறப்பாகும்.இவ்வாறு கண்ணாடியும் கடிகாரமும் வாஸ்துவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025