விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகரை முறையாக கரைப்பது எப்படி தெரியுமா?.

விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்தால் 21 வகையான சிறப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ganesha visarjanam (1)

சென்னை -விநாயகர் சதுர்த்திக்கு  விநாயகரை  வீட்டிற்கு வாங்கி வரும் நேரம் , நீரில் கரைக்கும் நேரம் எப்போது என்பதை பற்றி  இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வீட்டிற்கு விநாயகரை அழைக்கும் நேரம்;

செப்டம்பர் 7 ம் தேதி 2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாட படுகிறது. வெள்ளிக்கிழமையே சதுர்த்தி திதி ஆரம்பித்து விடுவதால் மாலை 4;30  மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்கிக் கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது.

குறிப்பாக களிமண் சிலை வாங்குவது சிறப்பாகும். சனிக்கிழமை செப்டம்பர் 7 அன்றும் விநாயகர் சிலையை வாங்கி வந்து பூஜை செய்து கொள்ளலாம். காலை 10:35 லிருந்து 1:20 வரை விநாயகரை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடும் செய்யலாம். மேலும் மாலை நேரம் ஆறு மணிக்கு மேலும் வழிபாடுகளை வைத்துக் கொள்ளலாம்.

பூஜைக்கு உகந்த பொருட்கள் ;

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் என்பதால் பூஜைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக விநாயகருக்கு வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு ,அவல் , பொரிகடலை வைத்தாலே போதுமானது. பிறகு அவரவர் வசதிக்கு ஏற்ப நெய்வேத்யங்களை  அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் விநாயகரின் பதிகமான  விநாயக அகவல் படிப்பது மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது.

விநாயகரை கரைக்கு முறை ;

விநாயகர் வீட்டுக்கு வந்த மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாளில் நீர் நிலைகளில் கரைத்துக் கொள்ளலாம். இதனை விசர்ஜனம்  விழா என  கூறப்படுகிறது. விநாயகரை கரைக்கும் போது  ராகு காலம் ,எமகண்டம் நேரங்களை தவிர்த்து கொள்ளவும் . ஆறு மணிக்கு மேலும் கரைக்கக் கூடாது.

உதாரணமாக வெள்ளிக்கிழமை விநாயகரை வீட்டில் வாங்கி வைக்கிறீர்கள் என்றால் ஞாயிற்றுக்கிழமை  ராகு காலம் ,எமகண்டம் நேரங்களை தவிர்த்து ஆறு மணிக்குள் கரைத்து விட வேண்டும். நீர் நிலைகளிலோ அல்லது ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் விநாயகரின் சிலையை கரைத்து செடி கொடிகளில் ஊற்றலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு பூஜை செய்தால் 21 வகையான சிறப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இலைகளும் சிறப்புகளும் ;

  • முல்லை இலை= வீட்டில் அறம் வளரும்.
  • கரிசலாங்கண்ணி இலை =பொன்னும் பொருளும் சேரும்.
  • வில்வ இலை= விரும்பியது கிடைக்கும்.
  • அருகம்புல் இலை =அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
  • ஊமத்தை இலை =பெருந்தன்மையான மனம் கிடைக்கும்.
  • இழந்த இலை= கல்வியில் மேன்மை கிடைக்கும்.
  • வன்னி இலை =பூலோகத்திலும் சொக்கலோகத்திலும் நன்மை கிடைக்க செய்யும்.
  • நாயுருவி இலை= முகப்பொலிவும், உடல் அழகும் கூடும்.
  • கண்டங்கத்திரி இலை= வீரத்தை தரும்.
  • அரளி இலை =எடுக்கும் முயற்சியில் வெற்றியைத் தரும்.
  • எருக்க  இலை= கருவில் உள்ள சிசுவிற்கு பாதுகாப்பு கிட்டும்.
  • மருதம் இலை= மகப்பேறு கிடைக்கும்.
  • விஷ்ணுகாந்தி இலை =நுண்ணறிவை பெருக்கும்.
  • மாதுளை இலை =புகழ், நற்பெயர்  கிடைக்கும்.
  • தேவ தாகு இலை= எதையும் தைரியமாக செய்யும் மனம் கிடைக்கும்.
  • மரிக்கொழுந்து= இல்லற சுகத்தை கொடுக்கும்.
  • அரச இலை =உயர் பதவி, வெற்றி கிடைக்கும்.
  • ஜாதி மல்லி இலை  =சொந்த வீடு அமையும்.
  • தாழம்  இலை= செல்வ செழிப்பை கிடைக்க செய்யும்
  • அகத்தி இலை= கடன் தொல்லை அகலும்.
  • தவணம்= நல்ல மண வாழ்க்கை அமையும்..

உங்கள் பிரார்த்தனைக்கு ஏற்ப இலைகளைக் கொண்டு பூஜை செய்வதன் மூலம் விநாயகரின் பரிபூரண ஆசியை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்