உங்கள் வீட்டில் வராகி அம்மன் படம் இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் ..!
வராகி அம்மன் வழிபாடு -கடந்த சில வருடங்களாக வராகி அம்மன் வழிபாடு மிக பிரபலமாக உள்ளது. வராகி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சரியா மற்றும் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
வராகி அம்மனின் சிறப்புகள்:
- வராகி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராகவும் ,அம்பிகையின் சேனாதிபதியாகவும் உள்ளவர். திதிகளில் ஐந்தாவது திதியான பஞ்சமி திதி வராகி அம்மனுக்கு சிறப்பாக கூறப்படுகிறது. இது வராகி வழிபாட்டிற்கு மிக உகந்த தினமாகும்.
- வராகி அம்மன் வராக முகத்துடன் அதாவது பன்றி முகத்தோடு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவர் மிகவும் உக்கிர தெய்வமாகவும் சாந்தம் உள்ளவளாகவும் இருக்கிறார்.
வீட்டில் வைத்து வழிபடும் முறை:
- எந்த ஒரு விக்ரஹங்களையோ, கடவுளின் உருவப் படத்தையோ நாம் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை நாம் முறையாக பராமரிக்க வேண்டும் அப்படி பராமரித்து நாம் வழிபாடு செய்தால் நிச்சயம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- அதுபோல்தான் வாராகி படமும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதை நாம் முறையாக பராமரித்து வழிபாட்டினை செய்ய வேண்டும். அநீதிக்கு குரல் கொடுக்கும் தெய்வம் என்பதால் தான் உக்கிர தெய்வம் என கூறப்படுகிறார்.
வழிபடும் முறை:
- வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் விளக்கேற்றி, பானகம் அல்லது பால், சக்கரை பொங்கல் இதில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.
- குறிப்பாக இரவு எட்டு மணிக்கு மேல் வராகிக்கு உரிய ஸ்லோகத்தை உச்சரித்து வழிபாடு செய்வது சிறப்பாக கூறப்படுகிறது.
- எந்த ஒரு குரோத எண்ணங்களும் இல்லாமல் நல்ல எண்ணத்துடன் உண்மையாகவும், தூய்மையான அன்போடும் வழிபாடு செய்தால் நிச்சயம் வராகி செவி கொடுப்பார் ,உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைப்பார்.
- மேலும் நம் கூடவே இருக்கும் எதிரிகளின் தொல்லை அகற்றுவார். உள் அன்போடு வழி பட்டோமேயானால் நம் வாழ்க்கையை வராகி வளமாக மாற்றுவார்.
“நடக்கட்டும் நம்புகிறேன் என்பது மனிதர் வாக்கு, நம்பினால் நடக்கும் என்பது சித்தர் வாக்கு” இதில் நம்பினால் என்பது தான் முக்கியம். இதை செய்தால் நான் இதை தருகிறேன் என்று கடவுளிடம் கூறக்கூடாது.
ஆகவே நம் மனதார எந்த ஒரு தெய்வத்தையும் சரணாகதி அடைந்தால் நிச்சயம் அவர்கள் நமக்கு அருள் புரிவார்கள் .