Vastu-ஏழு குதிரை வாஸ்து படத்தின் பலன்கள் மற்றும் வைக்க வேண்டிய திசைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
வாஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஏழு குதிரை படத்தை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். இந்த குதிரையானது நவகிரகங்களில் சூரியன் மற்றும் சுக்கிர பகவானை குறிப்பதாகும் .
சூரியன் என்பது வேகத்தையும் ஆற்றலையும் தரக்கூடியதாகும். சுக்கிரன் என்பது செல்வம் ,கல்வி ,சுகபோக வாழ்க்கை போன்றவற்றை தரக்கூடியதாகும். இந்த வாஸ்து குதிரை படத்தை வைப்பதன் மூலம் உங்கள் வாழ்விலும் செல்வம் ,ஆரோக்கியம், நல்ல மணவாழ்க்கை போன்றவற்றை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் கண் திருஷ்டி, தீய சக்தி அண்டாமலும் தடுக்கிறது .தொழில் செய்யும் இடத்தில் தொழில் விருத்தியையும், வேகமான வளர்ச்சியையும் கிடைக்கச் செய்யும்.
இந்த வாஸ்து குதிரை படத்தை தேர்வு செய்யும்போது அதன் பின்புறம் சூரியனின் கதிர்வீச்சுகள், வானம், வானவில் போன்றவற்றுள் ஏதேனும் இருப்பது நல்லது .
மேலும் 7 குதிரைகளும் ஒரே திசையை நோக்கி ஓடுவது போல அல்லது செல்வது போல் இருக்க வேண்டும் .அது மட்டுமல்லாமல் அந்த குதிரைகள் சாந்தமாகவும் அமைதியாகவும் உள்ளதா என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.
வாஸ்து குதிரை படத்தை நான்கு திசைகளிலுமே மாற்றலாம் .ஆனால் கிழக்கு திசை நோக்கி மாற்றுவது சிறப்பாக கூறப்படுகிறது .குறிப்பாக அந்தக் குதிரைகள் உங்கள் வீட்டிற்குள் வருவது போல் திசையில் வைக்க வேண்டும்.
இந்த படத்திற்கு என்று எந்த ஒரு பூஜையும், வழிபாடுகளும் செய்யத் தேவையில்லை. இது ஒரு வாஸ்து படம் .ஆனால் இந்த படத்தை வைக்கும் திசையை பொறுத்து தான் அதன் பலனும் சக்தியும் கிடைக்கும்.
இந்த குதிரையின் படம் உங்கள் நிலை வாசலை பார்த்து இருக்கும்படி வைக்கக்கூடாது அதாவது இந்த குதிரைகள் உங்கள் வீட்டு வாசப்படியை நோக்கி இருக்கக் கூடாது .அது அந்த குதிரைகளின் ஆற்றலும் சக்தியும் வெளியேறுவதற்கான சமம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இவ்வாறு வைத்தால் குடும்பத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவும் செய்யும். சமையலறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அந்தக் குதிரைகள் ஆக்ரோஷமாகவோ கோபமாகவோ இருக்கக் கூடாது.
அதேபோல் குதிரைகள் வெவ்வேறு திசைகள் நோக்கி ஓடுவது போலும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நேர்மறை எண்ணங்கள் சிதறடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வாஸ்து படத்தை வாங்கி வைத்துவிட்டு எந்த உழைப்பும் செய்யாமல் இருந்தாலும் அதன் பலன் கிடைக்காது. இது ஒரு வாஸ்து படம் மட்டுமே. உங்கள் முயற்சிக்கு இது ஆதரவாக இருக்கும். நம்முடைய உழைப்பும் வாஸ்து குதிரையின் ஆதரவும் சேரும்போது தான் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் பெற முடியும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…