அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியவில்லை என்று கவலை வேண்டாம்..!இந்த 2 பொருட்களை வாங்கினால் போதும்..!

Published by
Sharmi

அட்சய திருதியை அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் செல்வா கடாட்சம் பெறுக தொடங்கும்..!

அட்ஷய திருத்தி அன்று தங்கம் வாங்கினால் செல்வ, செழிப்போடு வாழ முடியும் என்பது ஐதீகம். அதன்படி இன்று அனைவரும் நகை கடைகளுக்கு சென்று சிறு அளவிலான நகையாவது வாங்குவர். தற்போது தங்கம் இருக்கும் விலையில் அதனை வாங்குவது பலரால் முடியாத செயலாக இருக்கும். இதன் காரணத்தால் யாரும் வருத்தம்கொள்ள தேவையில்லை. அட்சய திருதி அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் போதும். உங்கள் வீட்டில் செல்வம் சேர தொடங்கும். முதல் பொருள் குண்டு மஞ்சள். இரண்டாவது பொருள் கல் உப்பு.

இந்த இரண்டு பொருட்களிலும் மகாலட்சுமி அம்சம் நிறைந்துள்ளது. அதனால் இந்த இரண்டு பொருட்களை இன்று கடையில் சென்று வாங்கி வாருங்கள். குண்டு மஞ்சள் பல்வேறு நன்மைகளை குடும்பத்திற்கு கொடுக்கும். வீட்டிற்கு ஒரு சுமங்கலி பெண் வந்தால் அந்த பெண்ணுக்கு குண்டு மஞ்சள் கொடுத்து அனுப்பினால், உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். அப்படிப்பட்ட நற்குணங்கள் நிறைந்த மஞ்சளை கடைக்கு சென்று வாங்கி வந்த பிறகு, ஒரு பாத்திரத்தில் நிரப்பி கொள்ளுங்கள். மீதம் இருந்தால் அதனை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். நிரப்பிய அந்த பாத்திரத்தை உங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டும்.

மேலும், கடைக்கு சென்று வாங்கி வந்த கல் உப்பை செம்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நிரப்ப வேண்டும். மீதியை எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த கல் உப்பு இருக்கும் பாத்திரத்தையும் பூஜை அறையில் வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். ஆடை, ஆபரணம், பணம் என அனைத்தும் பெருக தொடங்கும். அட்சய திருத்தி அன்று நீங்கள் தங்கம் தான் வாங்க வேண்டும் என்று கிடையாது. எந்த பொருள் இன்று வாங்கினாலும் அது இரட்டிப்பாகும் என்பது தான் அர்த்தம். அதனால் உங்களுக்கு எந்த பொருள் இரட்டிப்பாக வேண்டுமோ அந்த பொருளை இன்று வாங்குவது சிறந்தது.

Recent Posts

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

21 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

1 hour ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

3 hours ago