தீபாவளி 2024- செல்வந்தர்களின் ரகசிய வழிப்பாடான தன திரியோதசி வழிபாடு எப்போது தெரியுமா?.

ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே  தன திரியோதசியாக கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது.

thana thiriyotasi (1)

ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே  தன திரியோதசியாக கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது.

சென்னை- செல்வ வளத்தை பெருக்கும் தன திரியோதசி நாளை வழிபடும் முறைகளையும் ,அதன் சிறப்புகளையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தன திரியோதசி 2024;

வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாக இந்த தன திரியோதசி கொண்டாடப்படுகிறது . இந்த தன திரியோதசியின் மூன்றாம் நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தன த்ரியோதசி தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது. தன என்றால் செல்வம். செல்வத்தை அள்ளித் தரும் திரியோதசி என்பது பொருளாகும் . இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

தன திரியோதசியின் சிறப்புகள்;

அமுதத்தை ஒரு கையிலும் ஆயுர்வேத சுவடியை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் ஆரோக்கியத்தின் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரி பகவானே வணங்க வேண்டிய நாளாக இந்த தன திரியோதசி கூறப்படுகிறது . இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவபெருமானின் வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த நாளாக உள்ளது. இந்த நாளில் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பூஜை பொருள்கள் வாங்கி வருவது வீட்டில் செல்வ செழிப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும்  வடநாட்டில் தன்வந்திரி ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.பல செல்வந்தர்களின் முக்கிய வழிபாடாகவும் திகழ்கிறது .

யார் இந்த தன்வந்திரி பகவான்?

பாற்கடலை கடையும்போது முதலில் மகாலட்சுமி தாயாரும்,  தன்வந்திரி பகவானும் தோன்றியுள்ளனர் .பிறகு காமதேனு ,சங்கு ,யானை போன்றவைகள்  வெளிவந்துள்ளன. அப்போது மகாவிஷ்ணு தன்வந்திரி பகவானை நோக்கி  “வைத்தியத்தின் அரசனாக பூலோகத்திற்கு சென்று மூலிகைகளின் பெருமைகளை அறிந்து உன் சேவைகளை செய் “தக்க சமயம் வரும்போது என்னுடைய அவதாரம் நீ என இந்த உலகிற்கு அறியச் செய்வேன் என்று கூறியுள்ளார் என புராண செய்திகளில் கூறப்படுகிறது.

தன்வந்திரி பகவான் எப்பேர்பட்ட நோய்களையும்  மூலிகைகளால் குணப்படுத்த முடியும் என இந்த உலகிற்கு அறியச் செய்தவர். இவரே முதல் வைத்தியர் என்றும் கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களையும் கூறியுள்ளார்.

ஆரோக்கியம் சிறக்க தன்வந்திரி பகவானே வழிபடும் முறை;

தன்வந்திரி பகவானின் திருவுருவப்படத்தை மணப்பலகையில் வைத்து பச்சை நிற துணி விரித்து படத்திற்கு துளசி மாலை அல்லது  துளசி  அணிவித்து நெய்வேத்தியமாக வெண்ணை மற்றும் சந்தனம் படைத்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். தன்வந்திரி பகவானுக்கு என்று கோவில்கள் கிடையாது. ஆனால் ஒரு சில வைணவ தளத்தில் இவருக்கு என்று தனி சன்னதி உள்ளது. குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் இவருக்கென்று தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் தன திரியோதசி அன்று தன்வந்திரி வழிபாடுகளை செய்வதோடு மட்டுமல்லாமல் மாதம் தோறும் வரும் திரியோதசி திதியிலும், புதன், வியாழன், சனி, ஞாயிறு போன்ற நாட்களிலும் தன்வந்திரி பகவானே வழிபாடு செய்து வரலாம் .தன்வந்திரி பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் தான் என கூறப்படுகிறது.

கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் நல குறைப்பட்டால்  வாடுபவர்கள் இந்த தன்வந்திரி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணம் அடைவார்கள் எனவும் நம்பப்படுகிறது. மேலும் இன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு மேம்படும் என்றும் கூறப்படுகிறது .

ஆகவே வீட்டில் செல்வம் சேர லட்சுமி தேவியையும் ,ஆரோக்கியம் மேம்பட தன்வந்திரி பகவானையும்  இந்த தன  திரியோதசியில் வழிபட்டு அவர்களின் ஆசியை  பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்