திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில்..!! சித்திரை திருவிழா கோலகலமாக துவங்கியது..!!
சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது.
அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது.
அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.27-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 28-ந் தேதி தேரோட்டமும், 29-ந் தேதி தீர்த்தவாரியும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்று சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்