சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே அழைக்கலாம். ஏணென்றல் இந்த மாதத்தில் தான் பரம்பொருளான சுந்தரேஸ்வரனான சிவபெருமான் உலகிற்கு வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாக காட்சி அளித்தார்.
இந்த நெருப்புப்பிளம்பையே நாம் அனைவரும் திருவண்ணாமலை தீபமாக தரிசனம் செய்கிறோம். இதே போல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிளம்மிலிருந்து தமிழ்கடவுளான முருகன் அவதரித்தார், அவரை இந்த கார்த்திகை பெண்களே வளர்த்தனர் என்பதும் புராணம். இதே போல் சபரிமலை சாஸ்தாவும் ஒளி வடிவில் காட்சி தருபவர் ஆவர். எனவே ஒளியை அடிப்படையாக கொண்ட மாதம் என்பதாலும் ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரமே முதல் நட்சதிரமாக இருந்ததாலும் இம்மாதத்தில் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் இம்மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்கின்றனர். இதுவே பக்தர்கள் கார்த்திகை மாதத்தை மாலை அணிய தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…