வறுமையில் வாடும் ஏழையை கேலி செய்யும் நபர்களுக்கு நபிகள் விடுக்கும் எச்சரிக்கை…!!!!
- ஏழைகளை கேலி செய்யும் நபர்களுக்கு நபிகள் கூறும் எச்சரிக்கை.
- மறுமையில் அல்லா அளிக்கும் தண்டனை குறித்த தகவல்கள்.
மனிதர்களில் ஏழை பணக்காரர், என்ற வேறுபாடு பார்க்ககூடாது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்க்காக சக முஸ்லீம் ஏழையாக இருந்தால் அவர்களது ஏழ்மையையும்,வறுமையையும் கேலி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால், ”முஃமின்களில்” அதாவது மார்க்க நெறிகளை பின்பற்றுபவர்கள் ஏழையாக இருக்கும் ஆனோ பெண்ணோ அவர்களை ஏலனமாக பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ, அவர்கள் மீது வீண் பழி சுமத்துபவர்கள் ஆகியோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி அவர்களுக்கான பலனை அளிப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறார் முகமது நபி. எனவே ஏழைகள் என்பதற்காக அவர்களை மனிதர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது அனைவரையும் மதித்து நடக்கவேண்டும்.