இன்று 26.10.2018 இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு…
மேஷ ராசிகாரர்களுக்கு :
இன்று நீங்கள் கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேருகின்ற நாள். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். உங்கள் தொழில் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ரிஷப ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.உடல் ஆரோக்கியம் கருதிச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு.இன்று கடிதப் போக்குவரத்து உங்களின் கவலையைப் போக்கும்.
மிதுன ராசிகாரர்களுக்கு :
இன்று நீங்கள் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணுகின்ற நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.மேலும் விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடுகின்ற தருணம்.உங்களுக்கு அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
கடக ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களுக்கு அதிகாலையிலே வரும் அலைபேசி தகவல் நல்ல ஆனந்தம் தரும் நாள். மேலும் புதிய ஒப்பந்தங்கள் உங்களின் மகிழ்ச்சியைக் கூட்டும்.இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகி கல்யாண வயதில் உள்ள கடகராசிகாரர்களுக்குவரன்கள் வந்து வாயிற்கதவைத்தட்டும்.
சிம்ம ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். உங்களின் பணவரவு திருப்தி தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவர்.தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.இன்று நூதனப் பொருட்கள் சேர்க்கை உங்களுக்கு உண்டு.
கன்னி ராசிகாரர்களுக்கு :
கன்னி ராசிகாரர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நாள்.இன்று உங்களுக்கு கூடுதல் விரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திருபம்பி வந்து சேரும். இன்று குழப்பங்கள் அதிகமாகும். இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
துலாம் ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பணியாட்களால் தொல்லை உண்டு. இதுவரை சேர்த்த சேமிப்பு கரையும். பிள்ளைகளது குணமறிந்து செயல்படுவது நல்லது.
விருச்சக ராசிகாரர்களுக்கு :
இன்று நீங்க்கள் சந்திப்பவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகி ஒடுவார்கள். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் இன்று நடைபெறலாம். கொடுக்கல்–வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களுக்கு பெருமைகள் வந்து சேருகின்ற நாள். எதையும் சாமர்த்தியமாக பேசி உங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய்யும் தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்கு முடிவடையும்.
மகர ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களின் நட்பு வட்டாரத்தால் நல்ல காரியம் நடைபெறுகின்ற நாள். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். மேலும் மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த கொ/ண்டிருக்கும் சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள்.
கும்ப ராசிகாரர்களுக்கு :
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தைக் மேற்கொள்ள முயற்சிப்பீர்கள்.இன்று காவல்துறை சம்பந்தப்பட்ட செயல்களில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகன்று விடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறுகின்ற சூழல் உருவாகும்.
மீன ராசிகாரர்களுக்கு :
இன்று உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதுகின்ற நாள். நீங்கள் திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கின்ற நாள். பலன்தரும் விதத்தில் பயண வாய்ப்புகள் வந்து கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் மேலோங்கும்.
மேலும் ஆன்மீக (ம)ஜோதிட தகவலுக்கு DINASUVADU டன் இணைந்திருங்கள்
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…