தை தமிழ் மாத ராசிபலன் :சிந்தனைகளை செயலாக்குவதில் தீவிரம்..! காட்டும் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..??
தை தமிழ் மாத ராசிபலன் “சிந்தனைகளை செயலாக்குவதில் தீவிரம் காட்டும் ” மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
உங்கள் ராசியில் ராசிநாதன் புதன் ராசியைப் பார்ப்பதாலும் வேலை மற்றும் தொழில் விஷயங்கள் பொறுத்தவரையில் மிதுனத்திற்கு இம்மாதம் நல்ல மாதம்தான்.
அரசு மற்றும் தனியார்துறை கடக்க ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள். வரிகள் வசூலிக்கும் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை என அனைத்தும் கைக்கு கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள்.
இருந்தாலும் ஏழில் இருக்கும் சனியினால் கூட்டுத்தொழில், குடும்பம் ,நண்பர்கள், வட்டாரங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் உங்களில் ஒரு சிலருக்கு வருமானக் குறைவு காரணாமாக பணநெருக்கடிகள் இருக்கும்.
இம்மாதத்தில் பணம் சம்பந்தப்பட்டு கொடுக்கும் வாக்கு பலிக்காமல போகும் சூழல் ஏற்படும்.மாதத்தில் ராசியை செவ்வாய் பார்கிறார்.
இதனால் தேவையற்ற கோபத்தை அடுத்தவர் மேல் காட்ட வேண்டிய எரிச்சலை போன்றவற்றை வீட்டில் உள்ளவரளிடம் காட்டுவீர்கள் என்பதால் மாதத்த்தில் எதிலும் நிதானம் வேண்டும்.
ஒரு சில கடக ராசிகரார்களுக்கு வேலைமாற்றம், வீடு மாற்றம் ,தொழில் மாற்றம் போன்றவை நடக்க வாய்ப்பு உள்ளது.உங்களின் இளைய சகோதர மற்றும் சகோதரிகள் வழியில் நல்லது நடக்கும்.
மாதத்தில் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் எதையும் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இம்மாத முற்பகுதியில் உங்களின் பேச்சு விவகாரத்தில் கவனமாக இருங்கள்.
தங்களின் நிதானத்தை இழந்து எவரையும் பேசி விட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படகூடிய பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி அப்பொழுதே அதை தீர்த்துக் கொள்வது மிக நல்லது. ஒரு சிலருக்கு இதுவரை இருந்த தடைகள் எல்லாம் மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.
மொத்தத்தில் இந்த மாதம் “எதிலும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மாதமாகும். எல்லாவற்றிலும் ஈகோ பார்ப்பதே மிதுன ராசிக்கரார்களுக்கு பலமாகவும் அதுவே சில நேரங்களில் பலவீனமாகவும் இருக்கும்.
ஆகையால் விட்டுக்கொடுப்பவன் கேட்டுபோவதில்லை;கேட்டுபோனவன் விட்டுக்கொடுப்பதில்லை என்ற பழமொழிக்கு இணங்க கடக ரசிக்கரார்கள் இம்மாதத்தில் செயல்பட்டால் நம்மைகள் நாடி வரும்.