முக்தி அளிக்கும் மூர்த்தியாக அருளும் அருணாசலேஸ்வரர்..!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.!!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலானது பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி தலமாக விளங்குகிறது.இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக அருட்காட்சியளிக்கிறார்.அய்யனை காண தினமும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் என வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இந் நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலமானது நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று காலை 11.08 வரை நடைபெற உள்ளது. இந்த பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று
பகல் பொழுதில் இருந்தே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த வண்ணம் இருந்தனர் இந்நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கிய பின் அருணாசலேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கிரிவலமானது நேரம் செல்ல செல்ல சற்று கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பின் ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.கிரிவலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.