பஞ்ச பாண்டவர்கள் கடலுக்கடியில் வணங்கிய சிவஸ்தலம்..! இரவில் மட்டுமே வெளிபடும் கோவில் பற்றிய சிறப்பு தொகுப்பு..!

Default Image

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம் இன்றும் கேள்வி எழுப்புவர்களுக்கு நின்று பதில் கூறும் கோவில்.ஆலயத்தின் வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு இங்கு நடைபெறுகிறது. Image may contain: ocean, sky, outdoor, water and nature

இந்த ஆலயத்தில் தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை    பெருங்கடலானது  உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட ஒரு வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழிபட்டனர் என்று இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் எடுத்து கூறுகிறது.

Image may contain: outdoor and nature

இந்த ஆலயத்தின் உள்ள கல் கொடிமர் சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் கொண்டது.இதில் ஒரு அதிசயம்  என்வென்றால் இதுவரை வீசிய புயல்களினால் ஆலயம் ஒரு சிறு கிரல் கூட சேதமடையாமல் அப்படியே உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டமானது  இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொட்டு செல்கிறது நம்மால் நம் கண்களால் நம்ம முடியாத சிவன் ஆலயம்.

Image result for பஞ்ச பாண்டவர்கள் சிவன்

இதன் பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பிகிறது.ஆலயத்தின்  இருபுறமும் கடல் நீர் விலகி சிவனை வணங்க ஒரு வழியை நமக்கு  ஏற்படுத்தி கொடுக்கிறது.கடல்  நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் உள்ளே  சென்று கடலினுள் இருக்கும் சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்பு வருகின்றனர்.இந்த அற்புதமான பாண்டவர்கள் வழிபட்ட சிவத்தலம் அறியும் நமக்கே இத்தனை ஆச்சர்யம் என்றால் பார்வதி மணவாளவனனை  வணக்க வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

Related image

இத்தகைய கோவிலானது குஜராத் மாநிலத்தில் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரையான கோலியாக்கில் அமைந்துள்ளது. கடலுக்குள் உலகச் சிறப்பு மிக்க  நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் சிவபெருமான் நிஷ்களங்கேஷ்வர் என்ற பெயரில் காட்சி அளிக்கிறார். சிறப்பு வாய்ந்த  இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்