கடும் அதிர்வுக்கு நடுவிடுலும் தரிசனம்..! அய்யனின் நடை அடைக்கப்படுகிறது.!இந்நாளில்..!

Published by
kavitha

உலகப்புகழுக்கு பெயர் போன  சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும்  மகரவிளக்கு பூஜைகள்  சிறப்பு வாய்ந்தது .

Related image

கடந்த மாதம் டிசம்பர் 27 தேதி மண்டல பூஜையும் 14 தேதி மகரவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த 16 தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

சபரிமலையில் நேற்று வழக்கமான பூஜைகளுடனே காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு களபாபிஷேகமும நடைபெற்றது.

இன்று சனிக்கிழமையில் அய்யனுக்கு நெய்யபிஷேகம் நடைபெறாது. இதனால் அவருக்கு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் மாளிகப்புரத்தம்மன் கோவில் குருதி நிகழ்ச்சியானது  நடைபெறும்.

இந்த குருதி சடங்குகளில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள்  கலந்து கொள்வார்கள்  மாலையில் அதிக பொருட்செலவில்  நடத்தப்படும் அய்யனின் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் எல்லாம் நடைபெறும்.

இந்நிலையில் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ஸ்ரீமூலம் திருநாள் ராகவவர்மா அவர்கள் அய்யனை சிறப்பு தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பபட்டு விடும். இதன் பின்னர் பக்தர்கள் அய்யனின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் ராஜகுடும்ப பிரதிநிதிகளின்  சிறப்பு தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அடைக்கப்படும் நடையானது மீண்டும் மாசி மாத  பூஜைக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 -ம் தேதி மாலை 5.30 மணி அளவில் ஐயப்ப கோஷத்துடன் திறக்கப்படும்.இதனை தொடர்ந்து  17 தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago