கடும் அதிர்வுக்கு நடுவிடுலும் தரிசனம்..! அய்யனின் நடை அடைக்கப்படுகிறது.!இந்நாளில்..!
உலகப்புகழுக்கு பெயர் போன சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் சிறப்பு வாய்ந்தது .
கடந்த மாதம் டிசம்பர் 27 தேதி மண்டல பூஜையும் 14 தேதி மகரவிளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடந்த 16 தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் நேற்று வழக்கமான பூஜைகளுடனே காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு களபாபிஷேகமும நடைபெற்றது.
இன்று சனிக்கிழமையில் அய்யனுக்கு நெய்யபிஷேகம் நடைபெறாது. இதனால் அவருக்கு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் மாளிகப்புரத்தம்மன் கோவில் குருதி நிகழ்ச்சியானது நடைபெறும்.
இந்த குருதி சடங்குகளில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் மாலையில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் அய்யனின் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் எல்லாம் நடைபெறும்.
இந்நிலையில் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ஸ்ரீமூலம் திருநாள் ராகவவர்மா அவர்கள் அய்யனை சிறப்பு தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பபட்டு விடும். இதன் பின்னர் பக்தர்கள் அய்யனின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்நிலையில் ராஜகுடும்ப பிரதிநிதிகளின் சிறப்பு தரிசனத்திற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அடைக்கப்படும் நடையானது மீண்டும் மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 -ம் தேதி மாலை 5.30 மணி அளவில் ஐயப்ப கோஷத்துடன் திறக்கப்படும்.இதனை தொடர்ந்து 17 தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.