மேஷ ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் சேமிப்பு உயரும் நாள்.தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பு ஏற்படும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில்ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.கட்டிடம் கட்டும் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு யோகமான நாள். உறவினர்களின் பாராட்டு மழையில் இன்று நனைவீர்கள். மாற்று கருத்துடையோர் மனங்கள் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இன்று வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடனே பூர்த்தியாகும்.
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கிய அடியெடுத்து வைக்க வேண்டிய ஒரு நாள். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் ஒரு நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக இன்று அலைய நேரிடலாம். தங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கடக ராசிக்காரர்கள்:
இன்று உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழுகின்ற நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து இன்று விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகலாம். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் இன்று நனைவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று உங்களின் எதிரிகள் உங்களை விட்டு விலகுகின்ற நாள். எடுத்த காரியத்தை எளிதில் இன்று செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும் மற்றும் தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காக இன்று பேசி வசூலிப்பீர்கள்
இன்று நினைத்ததை முடித்து ஒரு நிம்மதி காணும் நாள். நேசிக்கும் நண்பர்கள் நிகழ்காலத் தேவைகளை இன்று பூர்த்தி செய்வர். இன்று குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோக உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
துலாம் ராசிக்காரர்கள் :
இன்று நீங்கள் சந்திக்கும் சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் ஒரு நாள். பிள்ளைகள் நலன் கருதி இன்று எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணமானது உருவாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த இன்று முற்படுவீர்கள்.
விருச்சக ராசிக்காரர்கள் இன்று பணவரவு திருப்தி தரும் ஒரு நாள். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு முழு ஒத்துழைப்பர். பக்குவமாகப் பேசிக் காரியங்களை இன்று முடிப்பீர்கள்.வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். கல்யாண முயற்சியானது கை கூடும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று உங்களை இன்பங்கள் தேடிவரும் ஒரு நாள். தனவரவு தாராளமாக உங்களை வந்து சேரும். அரசு வழி சலுகையும் கிடைக்கும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இன்று விளங்குவர். வீடு மற்றும் இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும்.
மகர ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் வருமானம் இருமடங்காகும் ஒரு நாள். வாகனம் வாங்கும் எண்ணமானது கைகூடும். ஊக்கத்தோடும் மற்றும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உங்களின் யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய ஒரு நாள். பொதுவாழ்வில் வீண் பழிகள் தங்களுக்கு ஏற்படலாம். மேலும் இன்று பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடமாற்றம் மற்றும் ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது
மீன ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை யானது உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பமானது கை கூடி வரும்.