பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் இதற்கு முன் பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் இருந்து மாலை 5 மணிக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையை அழைத்து வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு 6 கலசங்கள் வைத்து அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .
மேலும் 6 வகை அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை மற்றும் உபசாரங்களும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஓதுவார்கள், வேத விற்பன்னர்கள் பண்பாடி மற்றும் கட்டியம் கூறி மகாதீபாராதனையும் நடைபெற்றது.
தீபாராதனையின் போது பக்தர்கள் அனைவரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, பால தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று சரண கோஷம் எழுப்பி வணங்கினர்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…