பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பு..!

Default Image

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற  நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

Related image

இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் இதற்கு முன்  பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் இருந்து மாலை 5 மணிக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட மண்டபத்திற்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையை அழைத்து வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு  6 கலசங்கள் வைத்து  அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .

Image result for பழனி முருகன் தெப்ப உற்சவம்

மேலும் 6 வகை அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை மற்றும் உபசாரங்களும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஓதுவார்கள், வேத விற்பன்னர்கள் பண்பாடி மற்றும் கட்டியம் கூறி மகாதீபாராதனையும்  நடைபெற்றது.

தீபாராதனையின் போது  பக்தர்கள் அனைவரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, பால  தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று சரண கோஷம் எழுப்பி வணங்கினர்.

Image result for பழனி முருகன் தெப்ப உற்சவம்இதன் பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை குளத்தில் வலம் வந்தது.அப்போது வாண வேடிக்கைகள் எல்லாம் நடைபெற்றது.  மூன்றாவது முறை வலம் வந்த பின் தெற்குப்புறம் உள்ள படி அருகே தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்