முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம் வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம்.
தைப்பூச விழாவை பற்றி 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது.
இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் சிவபெருமானுக்கு என்று சிறப்பாக விழாவானது சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும்.
தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெறும் இந்த அபிஷேகங்களில் 1008 சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சன அடங்கும் மேலும் முருக பெருமான் வீதி உலா வந்த அருள் புரிவது வழக்கம்.
பக்தர்கள் அழகு குத்தி அரோகரா கோஷத்துடன் பால்காவடி,பன்னீர் காவடி ,புஜ்ப காவடி போன்ற காவடிகளுடன் முருகனை தரிசிக்க அறுபடை வீடுகளிலும் பாதயாத்திரையாக படையெடுத்து வந்து அறுபடையனை வழிபடுகின்றனர். இந்நிலையில் இன்று தைப்பூச திருவிழாவானது தமிழாகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. சர்வமும் சரவணன் ;அவரின் அருட் பார்வையை பெறுவோம்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…