இன்று தைப்பூசம்..!படை வீடுகளுக்கு படைஎடுத்த பக்தர்கள்..!அரோகரா கோஷத்தில் அதிரும் படைவீடுகள்..!!

Default Image

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம்.

தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது.

Related image

இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் சிவபெருமானுக்கு என்று சிறப்பாக விழாவானது சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும்.

தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெறும் இந்த  அபிஷேகங்களில் 1008 சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சன அடங்கும் மேலும் முருக பெருமான் வீதி உலா வந்த அருள் புரிவது வழக்கம்.

பக்தர்கள்  அழகு குத்தி அரோகரா கோஷத்துடன்  பால்காவடி,பன்னீர் காவடி ,புஜ்ப காவடி போன்ற காவடிகளுடன் முருகனை தரிசிக்க அறுபடை வீடுகளிலும் பாதயாத்திரையாக படையெடுத்து வந்து அறுபடையனை வழிபடுகின்றனர். இந்நிலையில்  இன்று தைப்பூச திருவிழாவானது தமிழாகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. சர்வமும் சரவணன் ;அவரின் அருட் பார்வையை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்