அரசாலும் மீனாட்சி…! களைகட்டியது மாசி திருவிழா..! கொடியேற்றம்..!
மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
மீனாட்சி அம்மன் கோவிலின் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் மாசி திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.இந்த கொடியேற்றத்தின் போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அங்கு இருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10 தேதியில் இருந்து 19 தேதி வரை காலை மற்றும் இரவு என இருவேளைகளும் அன்னை மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்து அருட்காட்சி அளிக்கின்றனர். மேலும் மார்ச் 1 தேதி கணக்கு வாசித்தல் நிகழ்ச்சியானது நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
இத்திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சாரபாக உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா போன்ற விஷேச நிகழ்ச்சிகள் பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் அவருடன் இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் இந்நிகழ்வுகளை செய்து வருகிறார்கள்.