கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடாசலபதி கோவிலானது கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலில் வருகின்ற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கும்பாபிஷேகமானது நடக்கின்றது.
இந்நிலையில் இதற்கான யாகசாலை பூஜையானது கடந்த 22 தேதி தொடங்கியது. 16 வகையான யாக குண்டங்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகின்றது.
இந்த பூசையானது திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜையை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர திருப்பதி வெங்கடாசலபதி சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலை மற்றும் 3 அடி உயர ஆண்டாள் சிலையுடன் 3 அடி உயர கருடபகவான் சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளானது நேற்று முன்தினம் மும்முரமாக நடந்தது. இந்த பணிகளை எல்லாம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்களாக உள்ள மோகன்ராவ், ரவிபாபு மற்றும் விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் ஆகியோர் பார்வையிட்ட நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது மேலும் இரவில் கோவிலானது மின்னொளியில் ஜொலிக்கின்து.கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கி உள்ளனர்.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…