கன்னியக்குமரியில் திருப்பதி கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை..!!

Default Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடாசலபதி கோவிலானது கட்டப்பட்டுள்ளது.

இக்கோவிலில் வருகின்ற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கும்பாபிஷேகமானது  நடக்கின்றது.

இந்நிலையில் இதற்கான யாகசாலை பூஜையானது கடந்த 22 தேதி தொடங்கியது.      16 வகையான  யாக குண்டங்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகின்றது.

இந்த பூசையானது திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜையை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மூலஸ்தான கருவறையில் 7½ அடி உயர திருப்பதி வெங்கடாசலபதி சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலை மற்றும் 3 அடி உயர ஆண்டாள் சிலையுடன்  3 அடி உயர கருடபகவான் சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளானது நேற்று முன்தினம் மும்முரமாக நடந்தது. இந்த பணிகளை எல்லாம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சென்னையில் உள்ள உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய உறுப்பினர்களாக உள்ள மோகன்ராவ், ரவிபாபு மற்றும் விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ் ஆகியோர் பார்வையிட்ட நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது மேலும் இரவில் கோவிலானது  மின்னொளியில் ஜொலிக்கின்து.கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில்  குவிய தொடங்கி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்