கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ..!கும்பாபிஷேகம்..!!
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் சுமார் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆனது கட்டப்பட்ட நிலையில் இந்த கோவிலில் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 16 யாக குண்டங்கள் மூலமாக இந்த பூஜையானது நடந்து வருகின்றது.இந்த யாகத்தில் திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 2 வது நாளான நேற்று யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்ச கவ்ய திவ்சமும் மற்றும் அதனை தொடர்ந்து பசுவும், கன்றும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவற்றிக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதன் பின்னர் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்துக்கு சென்று சுவாமியின் கருவறையில் தானியத்தில் வைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதியின் சிலைக்கு பூஜைகள் நடத்தினர். பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் அம்பாள் மற்றும் கருட பகவான் ஆகிய சிலைகளுக்கு எல்லாம் பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் பின் சரியாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோமம் மற்றும் பூர்ணாகுதியும் நடந்தது.
கன்னியாகுமரி திருப்பதி கோவில் கும்பாபிஷேசகமானது வருகிற 27 தேதி நடைபெறுகிறது.இதற்காக அதிகாலை 5 மணி முதல் மாலை வரை சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்தும் இயக்கப்படும். நாகர்கோவில் வடசேரி, தக்கலை, களியக்காவிளை, வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது