நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் பத்ர தீபவிழா..!வெகுசிறப்பு ..!
நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்ர தீபவிழாவானது நடைபெறும். அப்படி இந்த ஆண்டுக்கான விழாவானது கடந்த 2 தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் வேணுவனநாதருக்கு மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபத்துடன் மற்றும் அபிஷேக ஆராதனையும் நடந்தது.
சுவாமி -அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபமானது ஏற்றப்பட்டது.விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று மாலை பத்ர தீபம் ஏற்பட்டது. இதையொட்டி ஆறுமுக நயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் தங்க விளக்கு தீப ஒளியில் இருந்து சுவாமி சன்னதி உள் பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், அம்மன் சன்னதி உள்ளிட்டவைகளில் தீபம் ஏற்றப்பட்ட பின் கோவிலில் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டன.
இதில் முக்கியமான பத்ர தீபம் நந்தி சன்னதி முன்னால் தீபம் ஏற்றப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.