திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது.
மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது.
இநிலையில் வருகின்ற 30 தேதி வரை தாயார் புறப்பாடு இல்லை. மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூலஸ்தான சேவையும் கிடையாது. திருவாய் மொழி எனும் ராப்பத்து நிகழ்ச்சியானது வருகின்ற 31 தேதி தொடங்குகிறது.
மேலும் வருகின்ற 3 தேதி சொர்க்கவாசலானது திறக்கப்படுகிறது.அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வழிநடை உபயங்கள் கண்டருளி- ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி சரியாக மாலை 6.30 மணி அளவில் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தடைகிறார்.