மக்கள் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் பூச்சொரிதல் விழா..!!

Default Image

திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக  கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகின்றது.கோவிலின் மாசித்திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது.

பூச்சொரிதல் மற்றும் சாட்டுதல் கொடியேற்றம் என பல பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெறும்.இந்த வருடத்திற்கான மாசித்திருவிழாவானது நேற்று முன்தினம் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் விழாவானது நேற்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலை 6 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது .

சரியாக 8.30 மணி அளவில் அக்கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்து அதன் பின் பூக்களை அம்மனுக்கு படைத்து பின்னர் அந்த பூக்களை  கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்தனர்.அத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், முருகன் மற்றும் விழா நாயகியான கோட்டை மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் வீற்றிருந்தனர்.

இந்நிலையில் சரியாக 10.30 மணியளவில் தேரின் முன்னால் 21 வாழைதண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டது.பின்  பூத்தேரோட்டம் தொடங்கியது. மக்கள் வெள்ளத்திற்கு நடுவில் பூத்தேர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து போது பூ காணிக்கை மையங்களில் பூக்களானது பெறப்பட்டது.
இதேபோல் வழி எங்கும் அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து பூக்களை காணிக்கையாக செலுத்தினர்.இந்த காட்சியை பார்க்கும் போது பக்தர்கள்  வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போல காட்சியளித்தது.பின்னர் விழாவில் இன்றைய
நாள் அம்மனுக்கு காலை 10 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 12 மணிக்கு சிறப்பு பூஜை இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன்  தீபாராதனை பின்னர்  இரவு வீணை இன்னிசை கச்சேரியானது நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்