எதிரிகளை கண்டு அஞ்சாத கன்னி ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு தை தமிழ் மாத ராசி பலன் எப்படி இருக்கிறது ன்பதை பார்ப்போம்.
தை மாத ஆரம்பத்தில் தைரிய ஸ்தானாதிபதியான செவ்வாய் 3 இருக்கும் குருவுடன் பரிவர்த்தனை வலுப்பெற்ற அமைப்பில் உள்ளதால் கன்னி ராசிக்காரர்களுக்கு இது உற்சாகத்தையும் ஒரு உத்வேகத்தையும் அளிக்கக் கூடிய ஒரு மாதமாகவே இருக்கும்.
உங்களின் வேலை மற்றும் தொழில் வியாபார அமைப்புக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.ஒரு சிலருக்கு வேலைக்கு செல்லும் தங்கள் மனைவியால் உதவிகளும், மற்றும் பணத்தேவைகள் நிறைவேறும் .
கன்னி ராசி கலைஞர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த அற்புதமான மாதமாகும்.மேலும் அழகுக்கலை, மாடலிங், சமையல், லாட்ஜிங், முடி திருத்துவோர்,போன்ற சம்பந்தப்பட்ட துறையிள் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும் ஒரு பொன்னான மாதமாகும்.
பொதுவாகவே இமாதத்தில் அனைத்து தரப்பு கன்னி ராசிக்கரார்களும் கொஞ்சம் நிம்மதியாகவே உணருவீர்கள்.இம்மாதத்தில் எந்த ஒரு விஷயத்திலும் கன்னி ராசிக்கரார்கள் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.இம்மாதத்தில் சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் பயத்தைக் கொடுக்கும்.ஆனால் ஒன்றும் ஆகாது. பத்தே நாட்களில் சரியாகி விடும்.
உங்கள் ராசியில் 4-ம் வீட்டில் சனி இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எவரிடமும் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டியது இம்மாதத்தில் அவசியம்.மேலும் யாராவது நிதானத்தை இழந்து பேசிவிட்டால் அது தீவிரமான கருத்து வேறுபாடுடன் சண்டையாகி நிரந்தர பிரிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
ஆகையால் எங்கும் எதிலும் கவனம் தேவை மற்றும் அவசியம்.நீங்கள் செய்கின்ற வேலையில் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். இளைய பருவத்தினல் உள்ள கன்னி ராசி அன்பர்களுக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை இம்மாதத்தில் கிடைக்கும். சிலருக்கு தொழில் ரீதியான பயணங்கள் உண்டு.மொத்தத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய மாதம் கன்னி ராசி அன்பர்களுக்கு.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…