தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு அப்படி இந்த மாதத்திற்கான ராசிபலன்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது.
ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் பாக்கியாதிபதி குருவுடன் பரிவர்த்தனை யோக அமைப்பில் இருப்பதால் மாத இறுதியில் ராசியிலேயே ராசிநாதன் ஆட்சி நிலை பெறுவதாலும் இம் மாதத்தில் உங்களுக்கு யோகமான மாதமே.
பத்தாம் வீட்டில் யோகாதிபதி சூரியன் இருப்பதால் இம் மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றங்களும், லாபங்களும் கிடைக்கும். மேலும் உங்கள் ராசிநாதன் வலுவாக இருப்பதால் அனைத்திலும் மனஉறுதியுடன் இருப்பீர்கள். குறிப்பிட்டு சொன்னால் நீங்கள் சாதிக்கும் மாதம் தான் தை.
உங்களில் சிலருக்கு விவாகரத்து வழக்குகளில் உங்களுக்கு சாதகமான திருப்பங்கள் உண்டு. மேலும் இம்மாதம் ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான நல்ல செய்திகள் கூட கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள் உயர்வு தரும் மாதமாகும் இதேபோல் கடல்துறை, மீனவர்கள், கடலோரங்களில் இருப்பவர்கள் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடைபெரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். கலைஞர்கள் கலைத்துறையில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள்.
மேலும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்த மேஷ ராசி அன்பர்களுக்கு வெற்றி செய்தி கிடைக்கும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு மிகவும் நல்ல மாதம். கிரகங்கள் எல்லாம் நல்ல அமைப்பில் இருப்பதால் நீண்ட ஆண்டுகளாக முடியாமல் இழுத்துக் கொண்டே இருந்த விஷயங்கள் இம்மாதம் சாதகமான முடிவுக்கு வரும்.
ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும் . கடந்த சில மாதங்களாக மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் மாதமாகும். சங்கடங்கள் எல்லாம் விலகி சந்தோஷம் கூடி வரும் மாதமாகும்.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…