இன்று (ஜன..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?
இன்று (ஜன..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சியடையும் நாள். இன்று ஆதாயம் தரும் தகவல் ஒன்று அதிகாலையிலேயே வரலாம்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடையும். உங்களின் நண்பர்கள் நம்பிக்கைக்கு தகுந்த விதத்தில் நடந்து கொள்வர்.
இன்று நெடுநாள்கள் தேக்கநிலையானது மாறி ஊக்கத்துடன் செயல்படும் நாள். இன்று உங்களின் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற எண்ணம் மேலோங்கும்.
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று தங்களின் பொருளாதார முன்னேற்றமானது உயர்கின்ற நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியானது அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் ஒன்று கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல மூடிவுக்கு வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்கள்:
இன்று கடக ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்.உங்களுடன் உடன் பணிபுரிபவரால் நன்மை கிடைக்கும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு நல்குவார்.தங்களின் பயணத்தால் ஆதாயம் உண்டு. அரசியல் செல்வாக்கானது மேலோங்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடுகின்ற நாள். வரவானது திருப்தி தரும்.வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை இன்று வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.
கன்னி ராசிக்காரர்கள் :
இன்று கைபேசி மூலம் பொன்னான செய்திகள் எல்லாம் வந்து சேரும் நாள். புதிய பாதை இன்று புலப்படும். வாங்கல் மற்றும் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் இன்று கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக வாய்ப்புள்ளது.
இன்று உங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். அலைபேசி வழி தகவல்கள் அனுகூலமாகவே வந்து சேரும். ஆலய வழிபாட்டில் உங்களுக்கு ஆர்வம் கூடும். வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சக ராசிக்காரர்கள்:
இன்று நீங்கள் வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்ச்சி ஏற்படுகின்ற நாள். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு இன்று மகிழ்வீர்கள். தங்களின் பொருளாதார நிலையானது உயரும். நண்பர் வட்டாரம் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உங்களின் பயணங்களால் பலன் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று தடைகள் எல்லாம் அகலும் நாள். பண வரவு உண்டு. இன்று புகழ்மிக்க நபர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் எல்லாம் வந்து சேரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சினையானது இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மகர ராசிக்காரர்கள்:
இன்று தொழிலில் முன்னேற்றம் ஏற்படுகின்ற நாள்.கடவுள் வழிபாடுகளில் சிந்தனையைச் செலுத்தி மகிழ்வீர்கள். இன்று ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் மறதியால் விட்டப் பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று மதியத்திற்கு மேல் தங்களின் மனக்கலக்கம் அகலும் நாள். உங்களின் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகத் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது தான் நல்லது. கும்ப ராசியினர் நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். தங்களின் பயணத்தால் பலன் உண்டு.
மீன ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் எதிரிகளின் பலம் கூடுகின்ற நாள். இல்லத்தில் அமைதியானது குறைய வாய்ப்புள்ளது. அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது தான் தற்போது நல்லது. உற்ற நண்பர் ஒருவருடன் பகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் எல்லாம் கைநழுவிச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.