இன்று (ஜன..,31) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
இன்று ஆதாயம் கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய ஒரு நாள். இன்று அதிகாலையிலேயே விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது . குடும்பத்தில் உள்ளவர்களால் குழப்பங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் விவாகப் பேச்சுக்கள் முடிவடையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.எண்ணங்கள் எளிதில் நிறைவேற இன்று நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று நம்பிக்கைகள் மேலோங்கும் நாள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு இன்று கிடைக்கும்.உங்களிடம் உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகுவர்.
கடக ராசிக்காரர்கள்:
இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் ஒரு நாள்.இன்று வரவு போதுமானதாக இருக்கும்.உங்களை கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் இன்று வலிய வந்து உறவாடுவர்கள் . பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியானது வெற்றி பெறும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் ஒரு நாள். நீண்ட நாட்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு இன்று வரும். தாய்வழியில் தனலாபம் உண்டு. வாகன மாற்றும் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் பதிய கூட்டாளிகள் இன்று வந்து இணைவர்.
இன்று உங்களின் வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் ஒரு நாள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்று உடன்பிறப்புகள் வழியில் நீங்கள் கேட்கலாம்.இன்று வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இடம் மற்றும் பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும்.
இன்று அயல்நாட்டு முயற்சியில் எல்லாம் அனுகூலம் கிடைக்கும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கின்ற நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இன்று ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.
இன்று முக்கியப்புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடுகின்ற நாள்.உங்களின் நிதி நிலை உயரும். வருங்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். பயணத்தால் இன்று பலன் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று தங்களுக்கு விடிகாலையிலேயே விரயம் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு நாள். வீடு மாற்றம் மற்றும் இடமாற்றம் பற்றிய சிந்தனையானது மேலோங்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகளால் சற்று வாட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு.
மகர ராசிக்காரர்கள்:
இன்று சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கின்ற ஒரு நாள். எதிர்கால நலம் பற்றிய சிந்தனைகள் இன்று மேலோங்கும். விலகிச் சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்து சேருவர். தொழில் மாற்றம் செய்யலாமா என்று இன்று யோசிப்பீர்கள்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று தங்களின் மனச்சுமை குறைய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் தங்களுக்கு கூடும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அடகுவைத்த நகைகைளை எல்லாம் மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.
மீன ராசிக்காரர்கள்:
இன்று தங்களின் பாகப்பிரிவினைகள் எல்லாம் சுமுகமாக முடியும் நாள். உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொல்லை தந்தவர்கள் எல்லாம் விலகுவர்கள். பாதியில் நின்ற கட்டிடப் பணியானது தொடரும். நண்பர்கள் நல்ல தகவலை இன்று தருவர்கள்.